செஸ் விளையாட்டு வீரரான குகேஷ் அண்மையில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து பல்வேறு பாராட்டுகளும் பரிசு மலைகளும் வந்து குவிந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் சென்னை பையன் முகேஷ் என்று மேடையில் சிறப்புரையாற்றிய குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
உலக சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷிக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கியதோடு இளைஞர்களின் முன்மாதிரியாக இவரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள உலக சாம்பியன் பட்டத்தை இளம் வயதிலேயே வென்று சாதனை படைத்த குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெற்றவை அடுத்து நம்ம சென்னை பையன் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.
மேலும் நிகழ்ச்சியின் போது குகேஷுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசை வழங்கியதோடு தமிழ்நாடு அரசு சார்பில் ஐந்து கோடி ரூபாய் பரிசு தொகையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி 18 வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகைசை பாராட்டுவதாகவும் வாழ்த்துவதாகவும் சொல்லி இருக்கிறார்.
சீன சேம்பியனை வீழ்த்தி இந்த சாதனையை படைத்திருக்க கூடிய இவர் சென்னை பையன் அதனால் தான் இன்று உலகமே வியந்து அவரை பாராட்டி வருகிறது அவருடைய பெற்றோர்களை போல நானும் மகிழ்ச்சியிலும், பெருமையிலும் பூரித்து இருக்கிறேன்.
மேலும் அவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றை படித்த போது விளையாடும் திறன், சிறந்த குணம், மன உறுதி மட்டுமல்லாமல் எப்போதும் புன்னகையோடு இருக்கும் இவரது முகம் விமர்சனங்களை தாங்கக்கூடிய இயல்பு தான் இவரது இந்த வெற்றிக்கு அடிப்படை என்று நான் நம்புகிறேன்.
அத்தோடு உலக சாம்பியனாக மாற வேண்டும் என்ற தன்னுடைய கனவை திறமையாலும் உழைப்பாலும் வன்மையாக இருக்கக்கூடிய இவர் 7 வயதில் பயிற்சிக்குள் நுழைந்து 9 வயதிலேயே கேண்டிடேட் மாஸ்டர் பட்டத்தை வென்று 12 வயதில் மாஸ்டர் பட்டத்தை வென்று உலக சாம்பியன் ஆக மாறி இருக்கிறார்.
இவரின் இந்த செயலுக்குப் பின்னால் இருக்கும் விடா முயற்சி உழைப்பு தன்னம்பிக்கை இலக்கை நோக்கிய பயணம் இவை எல்லாம் தமிழக இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் என்று நம்புகிறேன் அதை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.
குகேஷின் வெற்றி இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதோடு ஊக்குவிப்பதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். திமுக ஆட்சி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க போதுமான அளவு அவர்களுக்கு வேண்டியதை வழங்கவும் பக்கபலமாக உள்ளது.
ஏற்கனவே 44 வது செஸ் ஒலிம்பியாட் போட் டி சென்னையில் நடந்ததை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நாம் நம்புகிறோம். இந்தப் போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றையும் பெருமையும் நம்முடைய திராவிட மாடலின் அடித்தளத்தையும் உலகே எடுத்துக்காட்டினோம்.
அது மட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க கூடிய வகையில் 56 செஷ் வீரர்களுக்கு உரிய ஊக்கத்தொகை பண்பாடு மற்றும் தேசிய அளவில் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 3345 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உரிய ஊக்கத்தொகை சாம்பியன் கிட் போன்றவற்றை வழங்கியுள்ளோம்.
இப்படி இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் கேப்பிட்டல் என்று தமிழ்நாடு சொல்லும் அளவுக்கு விளையாட்டு துறையை சிறப்பாக கவனித்து வரும் துணை முதல்வர் திரு உதயநிதி அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விளையாட்டை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு என்று ஒரு பெரிய வரலாறை இருக்கிறது இந்தியாவின் 85 கிராம் மாஸ்டர்கள் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இன்னும் பல திறமை வாய்ந்த சதுரங்க வீராங்கனைகளை வளர்த்தெடுக்க நிச்சயம் தமிழகம் முயலும் என அறிவிக்க விரும்புகிறேன்.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கென ஹோம் ஆப் செஸ் என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்
கல்வி மற்றும் விளையாட்டு இரண்டிலும் நம்முடைய தமிழ்நாடு இளைஞர்கள் சாதிக்க வேண்டும் அதனால் தான் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் என்று உயர்கல்வியை ஊக்குவிக்கும் திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம் அதுபோல செஸ் விளையாட்டில் ஆற்றலை அதிகரிக்க கூடிய வகையில் என்னென்ன சிறப்பாக செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வோம்.
Summary in English: In some exciting news from Tamil Nadu, Chief Minister Stalin has awarded a whopping 5 crore to chess prodigy Gukesh for his incredible achievements in the world of chess! This young champion has been making waves on the international stage, and it’s no surprise that the state is celebrating his success in such a grand way.