Wednesday , 22 January 2025
admk

40 நாட்களில் மீண்டும் தளவாய் சுந்தரம்..! ஏன் எடப்பாடி பின் வாங்கினார் .. வெளிவந்த தகவல்கள்..

பாஜக பேரணியில் பங்கேற்றதால் அதிமுக பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்ட தளவாய் சுந்தரம் மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது குறித்த விளக்கம்.

கன்னியாகுமரியில் அதிமுக முக்கிய பிரமுகர் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான தளவாய் சுந்தரம் அதிமுக அமைப்பு செயலாளராகவும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் எம்எல்ஏவாகவும் விளங்குகிறார். 

இந்நிலையில் இவர் பாஜகவிற்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் பாஜகவின் மைய அமைப்பான ஆர் எஸ் எஸ் பேரணியை அக்டோபர்  6 ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு தளவாய் சுந்தரம் கொடி அசைத்து துவங்கி வைத்தார். 

eps

இதைத்தொடர்ந்து இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வெளி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு தலைமைக்கு புகாராக சென்றது உங்கள் நினைவில் இருக்கலாம். 

இதை அடுத்து கழகத்தின் கொள்கை குறிக்கோள் கோட்பாடுகளுக்கு ஊரு செய்யக்கூடிய விதத்தில் சட்ட திட்டத்திற்கு முரண்பட்டு நடந்து கொண்டதால் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள வேண்டிய இருப்பதால் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தளவாய் சுந்தரம் வகித்துவரும் கழக அமைப்பு செயலாளர். மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

மேலும் தற்காலிகமாக நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம் 40நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே பொறுப்புக்கள் வகித்திட எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். 

இதுகுறித்து அவர் விடுத்த அறிவிப்பில் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்று கலந்து கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

admk

மேலும் தளவாய் சுந்தரம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்ததை அடுத்து மீண்டும் அதே பொறுப்பில் அவர் வசிக்க கட்சி உத்தரவிடப்பட்டுள்ளது என்று சொல்லி இருக்கிறார். 

இதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் இது என்ன கேலிக்கூத்து எடுத்தேன் கவுத்தேன் என்று இப்படி முடிவெடுத்து இருக்கிறார் என்று பல்வேறு வகையான கருத்து விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

Summary in English: Thalavai Sundaram is making waves again as he returns to the AIADMK party, and folks are buzzing about it! After a bit of a break, he’s back in the game, posting updates that have everyone talking. Edappadi Palanisamy seems to be all in on this move, and it’s clear that they’re looking to rally the troops.

Check Also

வணங்காத எழுத்தாளர்! மேடையிலேயே முதல்வர் பினராயி விஜயனை கண்டித்த எம்.டி வாசுதேவன்..!

It’s a sad day for the literary world as we mourn the loss of veteran Malayalam writer M.T. Vasudevan Nair, who has passed away.