Wednesday , 22 January 2025
TRAIN

மாப்பிள்ளைக்கு கிரீன் சிக்னல்.. பறந்த மெசேஜ் இன்ப அதிர்ச்சி தந்த கொல்கத்தா ரயில்வே..

மும்பையைச் சேர்ந்த சந்திரசேகர் திருமணத்திற்காக குடும்பத்தோடு அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்திக்கு ரயிலில் சென்று இருக்கிறார். ரயில் தாமதமாக சென்றதால் குறித்த நேரத்தில் மணமகன் தாலி கட்ட முடியாது என்பதை அறிந்து கொண்டு ரயில்வே கோரிக்கை விடுத்தனர்.

மும்பையை சேர்ந்த சந்திரசேகர் வாக் என்பவருக்கு கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அவர் குடும்பத்துடன் அசாம் மாநிலத்தில் இருக்கும் கௌஹாத்திக்கி 35 பேரோடு புறப்பட்டுச் சென்று இருக்கிறார்.

 இவர்கள் கல்யாண் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹௌராவுக்கு சென்று அங்கிருந்து கௌஹாத்தி செல்ல திட்டமிட்டு ட்ரெயின் டிக்கெட்டை முன் பதிவு செய்திருக்கிறார்கள்.

கல்யாண் ஹவுரா இடையே கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது ரயில் மிகவும் மெதுவாக சென்றுள்ளது. அதாவது ஹௌரா ரயில் நிலையத்தை சுமார் 3 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு தான் சென்றடையும் என்ற நிலை இருந்தது. 

இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் மாலை 4 மணிக்கு கெளஹாத்தி செல்லும் சாறுகாய் எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து ஒரு வேளை அந்த ரயிலை பிடிக்க முடியவில்லை என்றால் குடும்பத்தோடு சென்று கொண்டிருக்கும் இவரால் திருமணத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும். 

இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இரயிலுக்குள் மாட்டிக்கொண்ட மணமகன் உடனே ரயில்வே துறைக்கு X பக்கத்தில் ஒரு கோரிக்கையை விடுத்து தன்னுடைய முன்பதிவு டிக்கெட்டுகளை பதிவிட்டு தன்னுடைய நிலைமையை கூறி இருக்கிறார்.

இந்த கோரிக்கையானது உடனே உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து கீதாஞ்சலி ரயில் டிரைவருக்கு ரயிலை வேகமாக இயக்க உத்தரவிடப்பட்டது. 

அதை அடுத்து சாரி காட் ரயில் தாமதமாக செல்ல அறிவுறுத்தப்பட்டதை அடுத்து ரயில்வே துறையின்  சாதுரியத்தால் சரியான நேரத்திற்கு ஹௌரா ரயில் நிலையத்துக்குச் சென்று சாரி காட் ரயிலில் ஏறி திருமணத்திற்கு உரிய நேரத்தில் சென்று மணமகன் தாலி கட்டி இருக்கிறார். 

இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் வெகுவாக பரவி வருவதோடு ரயில்வே துறைக்கு அந்த குடும்பத்தார் மகிழ்ச்சியோடு நன்றியை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Summary in English : You wouldn’t believe the delightful surprise that unfolded near Kolkata, West Bengal, thanks to the railway! Picture this: a groom, all decked out in his wedding finery, is making his way to the ceremony when suddenly, a train rolls by. But this isn’t just any train; it’s decked out with colorful decorations and festive lights, creating a scene straight out of a movie!

Check Also

வணங்காத எழுத்தாளர்! மேடையிலேயே முதல்வர் பினராயி விஜயனை கண்டித்த எம்.டி வாசுதேவன்..!

It’s a sad day for the literary world as we mourn the loss of veteran Malayalam writer M.T. Vasudevan Nair, who has passed away.