வருகின்ற 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது இதனை அடுத்து நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய பெருமையை உத்தரகாண்ட் பெறுகிறது இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பல மதத்தினர் வசித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் திருமணம் விவாகரத்து, தத்தெடுப்பு வாரிசு உரிமை ஆகியவற்றில் அனைவருக்கும் பொதுவான விதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டம் வர உள்ளது.
இந்த பொது சிவில் சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக பேசியிருந்த சூழ்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் சாமி தனது மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் அதாவது ஜனவரி மாதத்தில் இருந்து எந்த திட்டம் அமலுக்கு வருவதால் பொதுமக்களின் நலன் சமத்துவம் தனிப்பட்ட சட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் அவர்கள் கொண்டுள்ள உறுதிபாட்டை இது பிரதிபலிக்கிறது.
மேலும் பர்சனல் சட்டங்கள் போன்ற சிக்கலான பிரச்சனைகளை சிறப்பாக கையாளுவதன் மூலம் சமூக நல்லிணக்கம் நீதியை நிலை நாட்டுவதில் முதல்வர் சாமி ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாக விளங்கி விட்டார்.
இவரது தொலைநோக்கு பார்வை உத்தரகாண்ட் மாநிலத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாற்றும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை இவரின் இந்த வேகம் மற்ற மாநிலங்களுக்கும் இந்த சட்டத்தை அமல்படுத்த உத்வேகம் அளிக்கும்.
இந்த பொது சிவில் சட்டத்தால் அனைத்து சமூகத்திலும் பலதரப்பட்ட திருமணம் தடை செய்யப்படுகிறது குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் முத்தலாக் குலா மற்றும் ஜிஹார் போன்ற சட்டத்திற்கு புறம்பாக இது போன்ற விவாகரத்து முறைகள் தடை செய்யப்படும்.
அது மட்டுமல்லாமல் இரு தரப்பிலும் முறையாக சடங்குகளுடன் நடக்கும் திருமணம் மட்டுமே சட்டபூர்வ திருமணமாக அங்கீகரிக்கப்படும். எனவே தம்பதிகள் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் தவறினால் 25,000 அபராதம் விதிக்கப்படும்.
லைவின் உறவுகள் இருக்கும் என்றால் அது குறித்தும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் சிறை தண்டனையை பெறவேண்டிய சூழ்நிலை ஏற்படும் மோசடி திருமணம் பலதரப்பட்ட திருமணங்களை தடுக்க இது உதவி செய்யும்.
அதுபோல கலப்புத் திருமணம் மதம் மாறி திருமணம் செய்வோரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் குழந்தை பாதுகாப்பை பொறுத்தவரை சட்டபூர்வமான பாதுகாவலர்களாக தந்தை இருப்பார் தாய்மார்கள் கஸ்டோடியன் என்று சொல்லப்படுவார்கள்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கஸ்டடி அவர்களது அம்மாவின் வசம் இருக்கும் முறையற்ற திருமணம் லைவ் இன் உறவுகள் மூலம் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்த சட்டம் பொதுவானதாக கருதப்படுகிறது அவர்களுக்கும் சொத்துரிமை உட்பட அனைத்து பாரம்பரிய உரிமைகளும் கிடைக்க வழி செய்யப்படும்.
தத்தெடுப்பது பற்றிய விதிமுறைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், சிறார் நீதி சட்டம் ஆகியவை தத்தெடுப்பு நடைமுறைகளில் தொடர்ந்து பின்பற்றப்படும் பொது சிவில் சட்டத்தின் கீழ் இந்து தத்தெடுப்புகளை பதிவு செய்வது கட்டாயம் இல்லை.
மறுமணத்துக்கு நிபந்தனைகளை விதிக்கும் பழக்கவழக்கங்கள் சட்டவிரோதமாகிறது பஞ்சாயத்து மூலம் விவாகரத்து வழங்குவது குற்றமாக பார்க்கப்படும் விவாகரத்து ஏற்படும்போது மெஹர் மற்றும் பராமரிப்பு தொகை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பது போன்ற விதிகளை ஆதரிக்கிறது.
தற்போது இருக்கும் திருமண சட்டம் ,ஷரியத் சட்டம் மற்றும் கிறிஸ்தவ திருமண சட்டம் உள்ளிட்ட பர்சனல் அதாவது தனிப்பட்ட சட்டங்கள் என்பது ஒவ்வொரு மதத்திற்கும் மாறுபடுகிறது அவை அனைத்தும் பொது சிவில் சட்டம் ஒன்றிணைக்க உதவி செய்யும்.
இதன் மூலம் சமத்துவத்தை உறுதி செய்வது பாலின நீதியை மேம்படுத்துவது தேசிய ஒருங்கிணைப்பை வளர்ப்பது போன்றவை மிக விரைவாக நடத்து மக்களுக்கு உரிய உரிமை கிடைக்கிறது.
Summary in English: Uttarakhand has made waves by becoming the first state in India to implement a Uniform Civil Code (UCC), and it’s definitely worth talking about! So, what’s all the fuss about? The UCC aims to replace personal laws based on the scriptures and customs of each major religious community in India with a common set governing every citizen. This means that regardless of religion, everyone will be subject to the same laws when it comes to marriage, divorce, inheritance, and adoption.