Wednesday , 22 January 2025
Vijay politics

இபிஎஸ் விஜய் கூட்டணி.? தவெகவிற்கு எத்தனை தொகுதியா?.. நடக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசியலில் களம் இறங்க உள்ள நிலையில் வருகின்ற 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு விஜயின் கட்சி தனித்துப் போட்டியிடுமா? அல்லது கூட்டணி சேருமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது எதிரி உள்ளது. 

இதை அடுத்து அ தி மு க உடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் அதற்கான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் விஷயங்கள் கசிந்த வண்ணம் உள்ளது. 

இதை அடுத்து அரசியல் களத்தில் சூடு பிடிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்படத்தில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் ஒருவர் அது வேண்டாம் என்று சொல்லி மக்கள் பணியாற்ற அரசியலில் குதித்திருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் கூத்தாடியால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டவர்கள் மத்தியில் முதல் மாநாட்டை நடத்தி அதில் ஆக்ரோஷமாக தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார். 

இதைத்தொடர்ந்து விஜயின் அரசியல் பிரவேசம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் தற்போது விமர்சிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். 

Vijay politics

இதைத்தொடர்ந்து எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாய் கூறியிருக்கின்ற தளபதி விஜய் தனித்துப் போட்டியிடுவாரா? அவரது நிலைப்பாடு என்ன என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. 

இதற்கான விடையை அவர் மாநாட்டில் கொடுத்திருக்கிறார் தன்னை நம்பி வரும் கட்சியோடு கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்திருப்பதை அடுத்து கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உறுதியாகிவிட்டது. அந்த வகையில் ஆளும் கட்சி திமுகவை தனியாக எதிர்க்க முடியாத நிலையில் விஜய் இருக்கிறார். 

எனவே இவர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் தோல்வியைத் தான் சந்திக்கும் என்ற நிலைமை தான் உள்ளது. மேலும் கூட்டணி அமைத்தால் மாஸ் வெற்றி கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. 

Vijay politics

இதை அடுத்து தற்போது இரு தரப்பும் திரை மறைவில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்து வருவதாக விஷயங்கள் கசிந்துள்ளது. மேலும் தனித்துப் போட்டி போட்டு தோல்வி அடைய விஜய் விரும்பவில்லை என தெரிய வந்துள்ளது. 

அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்திற்கு 80 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக விட்டுக் கொடுத்தால் மீதியுள்ள 154 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் நிலை உருவாகும். எனவே மேலும் சிறிய சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீதம் உள்ள தொகுதியில் தான் அதிமுக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

அப்படி தேர்தல் வெற்றி பெற்றாலும் அறுதி பெரும்பான்மைக்கு தேவையான 117 இடங்களை பெற முடியுமா? என்ற குழப்பம் அதிமுக மத்தியில் எழுந்துள்ளது. இதை அடுத்து வரும் நாட்களில் எடப்பாடி என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்து நிலவரம் நமக்குத் தெரியவரும்.

Summary in English : Actor Vijay TVK’s recent party alliance with ADMK has taken social media by storm! Fans and followers are buzzing about the unexpected collaboration, and it seems like everyone has an opinion. The news broke out, and before we knew it, memes, reactions, and discussions started flooding in.

Check Also

வணங்காத எழுத்தாளர்! மேடையிலேயே முதல்வர் பினராயி விஜயனை கண்டித்த எம்.டி வாசுதேவன்..!

It’s a sad day for the literary world as we mourn the loss of veteran Malayalam writer M.T. Vasudevan Nair, who has passed away.