சென்னை கிராண்ட் மாஸ்டர் இரண்டாவது சீசன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் அமெரிக்காவின் லெவோன் அரோனியனை தோற்கடித்து பட்டம் வென்றது.
உட்கார்ந்து கொண்டு அமர்ந்து விளையாடக்கூடிய விளையாட்டுக்காக விளையாட்டு இருந்தாலும் புத்தி கூர்மை மூளையை கசக்கி விளையாட கூடிய விளையாட்டு திகழ்கிறது.
இந்த விளையாட்டை விளையாடுவதின் மூலம் மூளை சுறுசுறுப்பு அடைவதோடு மட்டுமல்லாமல் கஷ்டமான நேரத்தில் எப்படி காய்களை நகர்த்தி வெற்றி கொள்கிறோமோ அது போல் நம் வாழ்க்கையிலும் வெற்றி அடைய நமக்கு இந்த விளையாட்டு பாடம் கற்றுக் கொடுக்கும் என்று சொல்லலாம்.
சென்னை கிராண்ட் மாஸ்டர் இரண்டாவது சீசன் கோட்டூர் புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் மற்றும் அமெரிக்காவின் லெவோன் அரோனியன் கலந்து கொண்டார்கள்.
அடுத்து அமெரிக்க வீரரை வீழ்த்தி டைப்ரைக்கர் முறையில் நடைபெற்ற போட்டியில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று இருக்கிறார்.
இவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 15 லட்சம் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. விளையாட்டுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர் முதன் முறையாக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றிருப்பது குறித்து மகிழ்ச்சியோடு கூறினார்.
மேலும் இந்த வெற்றியை அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் இந்த நேரத்தில் அதிக சந்தோஷத்தோடு இருப்பதாகவும் தன் நிலையை வெளிப்படுத்திய இவர் இந்த போட்டியை தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக செய்திருக்கிறது என்ற விஷயத்தையும் சொன்னார்.
இதை எடுத்து இந்த செஸ் விளையாட்டு வீரருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது போல இனிவரும் போட்டிகளிலும் இதுபோல் பல்வேறு வெற்றிகளை பெற்று இந்தியாவின் கௌரவத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
நீங்களும் செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால் கட்டாயம் இவரை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் இவரை போல பலரும் செஸ் விளையாட்டில் முன்னேற ஊக்குவிக்க வேண்டும்.
Summary in English: The Chennai Grandmasters 2024 was an event to remember, especially for Aravindh Chithambaram, who stole the show with his incredible performance! Chess enthusiasts from all over gathered to witness some intense matches, but it was Aravindh who really made waves. His strategic brilliance and calm demeanor on the board were something to behold.