Wednesday , 22 January 2025
cricket

IND vs SA : விளாசிக் காட்டிய திலக் வர்மா.‌. கடைசி வரை போராடி கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா..

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தகவல்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி நான்கு டி 20 போட்டிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த டி 20 தொடரில் பங்கேற்று விளையாடியது.

இதில் நடந்து முடிந்த இந்த டி 20 போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் இறுதிப்போட்டியை யார் வெல்வார்கள் என்ற கடும் போட்டோ போட்டி நிலவியது. 

இதனை அடுத்து மூன்றாவது போட்டியானது செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

cricket

மேலும் முதலில் பேட்டிங் என்ற இலக்கில் களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் சற்று சுதப்பியதை அடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி தந்தார். 

இதை அடுத்து மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆடி அனைவரையும் திக்கு முக்காட வைத்ததோடு தென் ஆப்பிரிக்க அணிக்கு தண்ணி காட்டினார்கள். 

இதில் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் பின் வந்து விளையாடிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரண்களில் அவுட் ஆகி ரசிகர்களை கிலி அடைய வைத்தார்கள்.

cricket

யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்ட நிலையில் மறுமுனையில் நின்று நிதானமாக திலக் வர்மா 56 பந்துகளில் ஏழு சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்று இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக மாறினார். 

இதை அடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 220 ரன்கள் எடுத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கியது. 

இந்திய அணியை எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 

indian cricket players

இதை அடுத்து தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்டுகள் மலமலவென்று சரிந்த நிலையில் ஒரு பக்கம் மார்கோ ஜான்சன் மட்டும் போட்டியின் இறுதிவரை ஆடி யார் வெல்வார்கள் என்று திக்கு முக்காட வைத்து விட்டார். 

இவர் 17 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் நான்கு பவுண்டரிகள் உட்பட 54 ரன்கள் எடுத்து பின் அவுட் ஆனார். இதை அடுத்து தென்னாப்பிரிக்க அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழந்து 208 ரன்கள் மட்டும் எடுத்தது. 

இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு இதில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே ஆன நான்காவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடைபெறும்.

Summary in English : What a thrilling match it was as India took on South Africa in the T20 cricket showdown! Fans were on the edge of their seats as the two teams battled it out under the bright lights. The energy in the stadium was electric, with supporters cheering for every run and wicket.

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.