Thursday , 23 January 2025

இந்தியாவிற்கு வந்து விளையாட மாட்டோம்.. எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்..!!

சாம்பியன் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானில் விளையாடவில்லை என்றால் இனிவரும் காலங்களில் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு விளையாடாது என்ற விஷயத்தை தெளிவு படுத்தியது.

வரும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வரும் 19ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் பாகிஸ்தானில் இந்த தொடர் நடைபெற்றால் அங்கு வந்து விளையாட மாட்டோம் என்று பிசிசிஐ அறிவித்தது. 

அத்தோடு நமது வீரர்கள் அந்தப் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் வெளிநாட்டில் அந்த போட்டிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்ததை அடுத்து இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் வெளிநாட்டில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை. 

அதே சமயம் ஹைபிரிட் மாடல் படி இந்த போட்டி நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தப் போவதில்லை என்றும் அந்த தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இந்த சூழ்நிலையில் பிசிசிஐ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் ஆலோசனை நடைபெற்றது. 

 சாம்பியன்ஸ் கோப்பை தொடர்பு குறித்து ஒரு தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி செய்தியாளர்களிடம் பேசும் போது அவரது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருக்கிறார். 

அவர் சொல்லும் போது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எது சிறந்ததோ அதைத்தான் செய்வேன் என்று உறுதி அளித்ததாகவும் ஐசிசி தலைவருடன் அவரும் அவரது குழுவும் தொடர்பில் இருப்பதாக சொல்லியதை அடுத்து பாகிஸ்தானுக்கு வந்து இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால் இனி ஒருபோதும் இந்தியாவிற்கு வந்து நாங்கள் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என்பதை அதிரடியாக சொன்னார். 

எனவே சாம்பியன் கோப்பை தொடர் குறித்து என்ன நடக்கிறது என்பதை இனிவரும் நாட்களில் தெரிவிப்போம் என்று ஐசிசி இடம் தான் தெரிவித்ததாகவும் இந்திய அணி தங்களுடைய கோரிக்கையை குறித்து எழுத்து பூர்வமாக எங்களிடம் அளிக்க வேண்டும். அதை இன்று வரை செய்யவில்லை என்பதையும் தெளிவு படுத்தினார். 

இதைத் தொடர்ந்து தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்லவில்லை என்றால் இந்தியாவிற்கே வரமாட்டோம் என்று கூறியிருப்பது ஒரு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த இழப்பை தடுக்க பிசிசிஐ என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Summary in English: In a recent turn of events, PCB Chairman Moshin Naqvi has made some pretty bold statements regarding the upcoming ICC Champions Trophy in 2025. He’s not holding back, claiming that Pakistan will never play in India for this highly anticipated tournament. It’s a big deal, especially considering the historical rivalry between the two cricketing nations.

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.