Wednesday , 22 January 2025
t 20

மரியாதை எல்லாம் போயிடும் கௌதம் கம்பீர் தவிப்பு.. 2 வெற்றி அவசியம்.. உண்மையான சவால்!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வி அடைந்தால் கௌதம் கம்பீருக்கு அழுத்தம் அதிகரிக்கும். இதுவரை கட்டிக் காப்பாற்றிய அவரது பிம்பம் முற்றிலும் சேதமாகும். 

ஆஸ்திரேலியா அணி மற்றும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த தொடரின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் இருந்து வருகிறார். அவர் போட்டியில் வெல்வதில் கவனத்தை அதிகளவு செலுத்தி இருக்கிறார். 

இந்திய அணி போட்டியில் வெல்வதின் மூலம் அவரது இமேஜ் பாதுகாக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் அவரது பயிற்சியாளர் பதவி இன்னும் பிரகாசமாகும் என்று தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தால் இந்திய அணி தோல்வியை சந்திக்காதீர்கள் என்று ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை அவர் பின்னடைவுகளை மட்டுமே சந்தித்து இருக்கிறார். 

இவர் பயிற்சியாளராக பதவியேற்ற பின் இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியை எதிர்த்து போட்டியிட்ட இந்திய அணி ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. 

இதை அடுத்து நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரிலும் சொந்த மண்ணிலேயே மூன்று முறை மண்ணைக் கவியது. இதற்கு கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டாலும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வந்தபின் செய்யப்பட்ட மாற்றங்கள் தான் தோல்விக்கு காரணம் என்று பேசப்பட்டது.

எனினும் இந்திய அணியில் ஆல் ரவுண்டர்கள் இடம் பெற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஆக்ரோஷமாக ஆட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்கள். இதை இந்திய வீரர்கள் செயல்படுத்த முயன்ற போது இந்திய அணி தோல்வியை சந்தித்தது. 

மேலும் கௌதம் கம்பீர் தனது பிடிவாதமான திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை வகுத்து எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தால் தான் வெற்றி இலக்கை அடைய முடியும். 

இதனைப் பின்பற்றும் போது தான் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முடியும்.

 இல்லையென்றால் எந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் 5 போட்டிகளில் குறைந்தது இரண்டு வெற்றிகளை பெற்றால் தான் கெளதம் கம்பீரின் மீது இருக்கும் மரியாதை காப்பாற்றப்படும். 

அப்படி நடக்கவில்லை எனில் பிசிசிஐ முதல் ரசிகர்கள் வரை அனைத்து தரப்பிலும் இருந்தும் கடுமையான விமர்சனத்தை கௌதம் கம்பீர் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.

 இது பற்றி ஹர்பஜன்சிங் பேசுகையில் ஒரு பெரிய அணியை வழி நடத்துவது அவ்வளவு எளிதல்ல என்று கூறியிருக்கிறார். 

அத்தோடு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முடிவு நன்றாக இருந்தால் அவரைப் பாராட்டுவார்கள். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த தொடர் அவரது பொறுமையையும் எந்த சூழ்நிலையிலும் கட்டுக்கோப்பாக இருப்பதை சோதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சொல்லி இருக்கிறார். 

இதை அடுத்து கௌதம் கம்பீர் வெளியில் நடக்கும் விஷயங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இந்த பரிட்சையில் அவர் தேர்வு பெற்று ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

 இந்த தொடர் அவர் எதிர்பார்ப்பது போல நடக்கவில்லை என்றால் அவர் அதிகளவு விமர்சனங்களை சந்திக்க வேண்டும் என்று ஹர்பஜன் கூறி இருக்கிறார். 

Summary in English: When it comes to the highly anticipated India vs Australia Test series, all eyes will be on Gautam Gambhir. As a former cricketer and now a commentator, Gambhir knows how crucial it is to stay composed during such intense matchups. The pressure can be overwhelming, especially when facing off against a formidable opponent like Australia.

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.