முகமது ஷமிக்கு தற்போது முத்து காலில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதால் ஆஸ்திரேலியா அனுப்ப தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் அனுமதி தரவில்லை என்ற விபரம் கசிந்து உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி பங்கேற்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள் மேலும் உடல் தகுதியை நிரூபிக்க சாமி தொடர்ந்து ரஞ்சிது முஸ்தாக் அலி டி20 போட்டிகளில் விளையாட வந்தார்.
இதனை அடுத்து தற்போது முட்டும் காலில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதால் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் இவருக்கு அனுமதி தரவில்லை என்ற சூழலில் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ள விஜய் ஹசாரா கோப்பை தொடர்காக பெங்கால் அணியில் சனி முதலில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வந்தது.
மேலும் பெங்கால் அணி டெல்லி அணிக்கு எதிராக தங்களுடைய முதல் ஆட்டத்தை ஹைதராபாத்தில் விளையாட உள்ளது இந்த போட்டியில் முகமது ஷமி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
இதற்கு காரணம் இவர் காலில் காயம் அதிகமாக இருப்பதால் சற்று ஓய்வு வழங்கப்படுகிறது என்று வெளிவந்த நிலையில் ஷமி திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவிற்கு செல்ல மாட்டார் இனி அடுத்த இலக்காக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக தான் விளையாடுவார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவில் கருத்து தெரிவித்த கேப்டன் ரோஹித் சர்மா ஷமி பற்றி தேசிய கிரிக்கெட் அகாடமிவில் உள்ள மருத்துவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறி இருந்ததே நினைவில் இருக்கலாம் அவர் 100% உடல் தகுதி அடைந்திருந்தால் நிச்சயம் திரும்புவார்.
இந்நிலையில் ஷமி இனி ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தான் விளையாடுவார் என தெரியவந்துள்ளது.
இதில் இவர் சிறப்பாக செயல்பட்டால் சாம்பியன் கோப்பை தொடரில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும் இல்லை என்றால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வாய்ப்பு உள்ளது.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அஸ்வின் கதையாக முகமது ஷமியின் கதையும் மாறுமா என்ற ரீதியில் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
Summary in English: In the latest buzz surrounding the India vs. Australia cricket series, it looks like Mohammed Shami won’t be making the trip down under. Fans were hoping to see him in action, but it seems he’s got other plans on his mind. Instead of packing his bags for Australia, Shami is gearing up to return home.