Wednesday , 22 January 2025
final match

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி புதிய வரலாறு.. தொடரை வென்று சாதனை..

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த T20 போட்டியில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

சூரியகுமார் தலைமையில் இந்திய கிரிக்கெட் அபாரமாக தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடி வரலாற்றுச் சாதனையை புரிந்துள்ளது என்று சொல்ல வேண்டும். 

டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வென்று 3-1 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை தன தாக்கிக் கொண்டது.

ஜோகனஸ் பர்கில் நேற்று நடந்த கடைசி மற்றும் நான்காவது டி 20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இமாலய சாதனையை புரிந்தது. 

இதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 283 ரண்களை எடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. இதை அடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா களம் இறங்கியது. 

ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி 148 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 135 ரன்கள் தோல்வி அடைந்து போனது. 

எந்த ஆட்டத்தில் இந்திய அணியைச் சேர்ந்த பேட்மேன்கள் திலக் வர்மா, சாம்சங் இருவரும் நேற்று ரசிகர்களுக்கு விருந்து வைக்கக்கூடிய அளவு ஆட்டத்தை களை கட்டி ஆடினார்கள்.

இந்த ஆட்டத்தில் மற்றும் இந்திய அணி சார்பில் 23 சிக்ஸர்கள் 17 பவுண்டரிகள் அடிக்கப்பட்டது இதில் 19 சிக்ஸர்கள்களை சாம்சன் திலக் வர்மா இருவரும் அடித்து நொறுக்கி இருந்தார்கள். 

அது மட்டுமல்லாமல் இருவரும் சேர்ந்து தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை திணறடித்ததோடு ஓவருக்கு 15 ரன் என்ற ரன் ரேட்டில் கோரை மளமளவென்று உயர்த்தினார்கள் பவர் பிளேயையில் ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சேர்த்த இந்திய அணி 3 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.

சாம்சங் 28 பந்துகளில் அரை சதமும் 51 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார் கிழக்கு வர்மா 22 பந்துகளில் அரை சதத்தையும் 41 பந்துகளில் சதத்தையும் எட்டினார். 

ஆனால் தென்னாப்பிரிக்கா அணியும் தனது முதல் சிக்சரை 50 பண்டுகளுக்கு பின்பு தான் அடிக்க முடிந்தது இந்திய வேகபந்த பேச்சாளரான ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் இருவரும் தங்களின் பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க பேட்மேன்களை திணறவிட்டார்கள்.

அர்ஷ்தீப் சிங் மூன்று ஓவர்கள் வீசிய நிலையில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரும் ஹர்திக் சேர்ந்து ஆட்டத்தை முடித்து விட்டார்கள் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் தோல்வி உறுதியானதை அடுத்து அந்த அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மில்லர், யான்சென் மட்டுமே ஓரளவு ரன் சேர்த்தார்கள் மற்ற பேட்மேன்கள் சொதப்பி விட்டார்கள். 

Summary in English: In the fourth and final T20 International in Johannesburg, cricket fans were treated to a spectacular show as Sanju Samson and Tilak Varma stole the spotlight. These two young guns put on an absolute masterclass, guiding India to a jaw-dropping total of 283 for just 1 wicket! Can you believe it?

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.