Wednesday , 22 January 2025

டெஸ்ட் தொடர் வாழ்க்கை முற்றுப்புள்ளி வைக்கும் ரோஹித் சர்மா.. 3-வது டெஸ்டிலும் சொதப்பல் .. என்னாச்சு இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா குறைந்த அளவு ரன் எடுத்து ஆட்டம் இழந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். அது குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. 

இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து 445 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா இதை எப்படி கையாளும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தார்கள். 

எனினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வகையில் பேட்டிங்கில் இந்தியா கடுமையாக தடுமாறியது ஜெய்ஸ்வால் 4 ரன்கள், கில் ஒரு ரன்னிலும் விராட் கோலி 3 ரன்களிலும் ரிஷப் பண்ட் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழக்க கே எல் ராகுல் மற்றும் பொறுப்போடு விளையாடினார். 

இலையில் முதல் மூன்று நாள் ஆட்டங்கள் மழையால் பெருமளவு பாதிக்கப்பட இந்திய அணி 51 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற சோறுடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர இதில் ராகுல் 33 ரன்களும் ரோகித் சர்மா 0 ரன்னோடும் ஆட்டத்தை தொடர்ந்தார்கள். 

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சொதப்பியதோடு மட்டுமல்லாமல் கடந்த சில டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் அவரது ஆட்டம் தடுமாற்றத்தை தான் தந்துள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா 13 இன்னிங்சில் ஆடி இருக்கிறார். இதில் அரை சதம் அடித்தது 7 இன்னிங்ஸ்கள் ஆகிறது. 

நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 52 ரன்களை எடுத்த நிலையில் அதன் பிறகு ஆடிய ஆட்டங்களில் 0,8, 11, 3, 6 என்ற ரன்களை தான் அடித்திருக்கிறார். இதனால் ரோகித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. 

மேலும் இந்திய அணி தோல்வியை தவிர்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் பாலோயாணையாவது தவிர்க்க வேண்டும் இதனால் ரோஹித் சர்மா என்று ஒரு அரை சதம் அடித்திருந்தால் அது இந்திய அணியின் தோல்வியை தவிர்க்க வாய்ப்பாக அமைந்திருக்கும். 

ரோகித் சர்மா மற்றும் ராகுலும் இணைந்து இந்திய அணியை இதிலிருந்து மீட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா வழக்கம் போல 10 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி ஒரு மிகப்பெரிய பின்னடைவை இந்தியாவிற்கு ஏற்பட்டு இருக்கிறார். 

இவர் கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருவதால் டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று பலரும் பல்வேறு கருத்துக்களை சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அதனை எதிர்பார்த்து இருக்கிறார்கள். 

Summary in English: The recent India vs. Australia match had fans on the edge of their seats, but nothing sparked more frustration than Rohit Sharma’s dismissal for just 10 runs. After a promising start, he played a shot that left everyone scratching their heads and muttering under their breath. You could almost hear the collective sigh from the stands as his wicket fell.

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.