நியூசிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 45 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறித்த தகவல்.
கிரிக்கெட் என்றால் இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவு ரசித்துப் பார்க்கக் கூடிய விளையாட்டுகளில் ஒன்றாக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கும் விளையாட்டு தான் இந்த கிரிக்கெட்.
இந்நிலையில் தற்போது இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இடங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சி கடலில் தள்ளியது.
தம்புள்ளையில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையே ஆன ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இதில் பேட்டிங்கில் களம் இறங்கிய இலங்கை அணியின் நிசங்கா 12 ரன்கள் ஆட்டம் இழந்தார்.
இதை அடுத்து பார்ட்னர் ஷிப் அமைத்து விளையாடிய அவிஷிகா பெர்னான்டோ 100 ரண்களும் குசால் மெண்டிஸ் 143 ரண்களும் குவித்தனர்.
இதில் கேப்டன் சரிகா அசலங்கா அதிரடியாக 28 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து அனைவரையும் வியக்கக்கூடிய வகையில் விலாசி தள்ளினார்.
49.2 ஓவரில் இலங்கை 324 ரன்கள் எடுத்திருந்த போது மழை ஏற்பட்டு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது இதை அடுத்து நியூஸிலாந்து அணிக்கு 27 ஓவர்களில் 221 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் வில்லியம் 48 ரண்களும் டீம் ராபின்சன் 35 ரன்கள் கொடுத்து நல்ல துவக்கத்தை தந்தார்கள் இதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் இலங்கையின் சுழற் பந்து வீட்டில் சுருண்டு விழுந்தார்கள்.
எனினும் நியூசிலாந்தை சேர்ந்த மைக்கேல் வெற்றிக்காக போராடிய நிலையில் மற்ற விக்கட்டுகள் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்காவால் வீழ்த்தப்பட்டது.
மேலும் நியூசிலாந்து அணி 27 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் மட்டும் எடுத்து இருந்ததை அடுத்து இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இந்தப் போட்டியில் மதுஷன்கா 3 விக்கெட்டுகளும் தீக்ஷனா மற்றும் அசலங்கா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்து இலங்கையின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்கள்.
Summary in English: What a match it was! Sri Lanka took on New Zealand in an exciting one-day cricket showdown, and the result was nothing short of thrilling. Sri Lanka managed to clinch victory by a solid 45 runs, much to the delight of their fans.