பி கே எல் என்று அழைக்கப்படும் ப்ரோ கபடி லீக்கில் இன்று குஜராத் மற்றும் பெங்கால் அணிகள் மோத உள்ளது. இதில் வெற்றி யாருக்கு என்பது பற்றிய அலசல்.
கிரிக்கெட்டை போலவே என்று கபடி போட்டிக்கும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது .அந்த வகையில் ப்ரோ கபடி லீக் 2024 தொடரில் இன்று முதல் போட்டி நடக்க உள்ளது.
இந்தப் போட்டியில் குஜராத் மற்றும் பெங்கால் அணிகளும் இரண்டாவது போட்டியில் பாட்னா மற்றும் ஹரியானா அணி மோதவுள்ளது.
இந்த ப்ரோ கபடி 11 வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 18-ஆம் தேதி துவங்கியதை அடுத்து இந்த தொடரில் தமிழ் தலைவாஸ், டாபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான் உள்ளிட்ட 12 அணிகள் விளையாடி வருகிறது.
இதுவரை 50 போட்டிகள் அடைந்து முடிந்த நிலையில் ஒன்பது போட்டியில் விளையாடிய புனேரி பல்தான் ஐந்து வெற்றிகளுடன் புள்ளி பட்டியல் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் எட்டு போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் டெல்லி அணியானது 10 போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மேலும் குஜராத் எட்டு போட்டியில் விளையாடி ஒரே ஒரு வெற்றியைப் பெற்று 12 வது இடத்தில் உள்ள நிலையில் தமிழ் தலைவாஸ் எட்டு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி அடைந்து முடிந்த நிலையில் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் 51 வது போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்தப் போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு நொய்டாவில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியை hotstar மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்யப் போகிறது .இது போலவே 52 வது போட்டியில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளது.
அந்த வகையில் குஜராத் மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் குஜராத் 12 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.
இந்த ப்ரோ கபடி லீக் 2024 தொடரில் புனேரி பல்தான் அணிதான் நம்பர் ஒன் இடத்தில் உள்ள நிலையில் இந்த முறை டிராபியை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது என்று சொல்லப்படுகிறது.
எனவே இன்றைய இரவு ஆட்டம் முக்கியத்துவம் பெற்ற ஆட்டங்களில் ஒன்றாக ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டுள்ளதோடு யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்று சொல்லலாம்.
Summary in English: Kabaddi fans! The excitement is through the roof as we gear up for today’s epic showdown between Gujarat and Bengal in Pro Kabaddi 2024! Both teams have been on fire this season, and it’s tough to predict who will take home the win.