இந்தியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணி அணிகள் செய்ய முடியாத சரித்திர சாதனையை பாகிஸ்தான் செய்துள்ளது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்று கைப்பற்றி இருக்கிறது இது குறித்து பார்க்கலாம்.
தென்னாபிரிக்க மண்ணில் மூன்று போட்டிகள் அல்லது அதற்கு மேற்கொண்ட ஒரு நாள் தொடரில் ஓயிட் வாஸ் செய்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை பாகிஸ்தான் அணி செய்துள்ளது.
இதற்கு முன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை பலமுறை வென்று இருந்தாலும் ஒயிட் வாஸ் வெற்றியை ஒரு முறையும் பெற்றதில்லை.
அதாவது தென்னாபிரிக்க மண்ணில் ஒரு நாள் தொடரில் நனைந்த அனைத்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியதில்லை. இந்த சாதனையை முதன் முதலில் வென்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கடந்த ஒரு ஆண்டுகளாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்துள்ளது. அதன் முடிவாக தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது விஸ்வாஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என்று வென்றது.
இதனை அடுத்து தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்று வென்றுள்ளது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்ததை சுட்டிக்காட்டும்படி இந்த நிகழ்வு உள்ளது. 2025 இல் சாம்பியன் கிரிக்கெட் தொடர் அடுத்து பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது இந்த தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் தற்போது வீறு கொண்டு இருந்திருப்பது வரிசை, வரிசையாக வெற்றி கிடைத்திருப்பதும் முக்கியமான ஒன்றாக ரசிகர்களின் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.
Summary in English: Wow, what a series it has been! Pakistan has officially made history by becoming the first team to whitewash South Africa in an ODI series at their home ground. Can you believe it? The Green Shirts really brought their A-game and showcased some incredible talent on the field.