29 ஆண்டு காலம் மண வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து தங்களது உறவை முறித்துக் கொள்ள இருப்பதாக ஏ ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்திருக்க கூடிய விஷயம்.
இசைப்புயல் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகம் முழுவதும் பணி புரிந்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் உலக அளவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இசை அமைத்து கோல்டன் குளோபல் விருதை வென்றெடுத்த இந்தியராக விளங்குகிறார்.
இந்நிலையில் அண்மைக்காலமாக திரையுலகப் பிரபலங்கள் பலர் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் விவாகரத்து ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் மூழ்கடித்து வந்தார்கள்.
அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய மனைவி சாய்ரா பானு அவர்களை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த நிலையில் பல்வேறு விவாதங்கள் இணையங்களில் எழுந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு பேட்டிகளில் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய மனைவி அவருடைய காதல் அன்பு பற்றி மிக நேர்த்தியான முறையில் ஒவ்வொரு இடத்திலும் அழகாக வெளிப்படுத்தியவர்.
இந்நிலையில் நகமும் சதையுமாக இருக்கக்கூடிய இவர்கள் மத்தியில் விவாகரத்த என்ற விஷயத்தை கேட்டு ரசிகர்கள் ஆடிப் போய்விட்டார்கள். மேலும் இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகஹ்மானை போல அவருடைய மனைவி சாய்ரா பானுவும் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வழக்கறிஞர் மூலம் வெளியிட்டு இந்திய திரை உலகை அதிர்ச்சியில் மூழ்கடித்தார்.
இது ஒரு பக்கம் இணையங்களில் பேசும் பொருளாக மாறி இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் தன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கக்கூடிய தகவல்கள் தற்போது வேகமாக காற்று தீ போல் பரவி வருகிறது.
அந்த வகையில் 2023 மற்றும் 2024 ஆம் நிதியாண்டில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் நிகர சொத்து மதிப்பு சுமார் 280 மில்லியன் டாலர்களை தாண்டும் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளது.
அதாவது இசைப்புயலின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 2380 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மனைவியை பிரியும் நிலையில் அவருக்காக எவ்வளவு தொகை ஜீவனாம்சமாக கொடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படி அந்த கேள்விக்கு பதில் தேடிய போது அவரது சொத்து மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு என்றால் கூட 500 கோடி தாண்டும் தலை சுத்துதுடா சாமி என்று இணையவாசிகள் புலம்பி வருகிறார்கள்.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
Summary in English: In the latest buzz around the Cine industry, it seems that music maestro A.R. Rahman is making headlines for more than just his incredible soundtracks. Reports are swirling that he’s set to shell out a whopping amount as maintenance for his soon-to-be ex-wife, Saira Banu, following their divorce. Fans of Rahman know him as a genius behind some of the most iconic film scores, but this personal chapter in his life has everyone talking.