Wednesday , 22 January 2025

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..! கண் முன்னே நடந்த விஷயம்..! லேட்டஸ்ட் தகவல்..!

இளைய திலகம் பிரபுவுக்கு தற்போது 68 வயதான நிலையில் மருத்துவமனையில் திடீர் என்று சேர்க்கப்பட்டார். இது குறித்து லேட்டஸ்ட் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

தமிழில் முன்னணி நடிகராக விளங்கிய நடிகர் பிரபு அண்மையில் சிறுநீரக கல் நீக்கக்கூடிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டு நலமோடு வீடு திரும்பியதை அடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து இவருக்கு மூளையில் வீக்கம் இருப்பதாகவும் அதற்குரிய அறுவை சிகிச்சையை செய்யத்தான் மீண்டும் மருத்துவமனை சென்றதாகவும் செய்திகள் வந்ததை அடுத்து தற்போது மூளை பிரச்சனைக்கு உரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டது. 

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..

இதை அடுத்து தற்போது நலமோடு இளைய திலகம் வீடு திரும்பி இருக்கும் விஷயம் பரவலாக வெளிவந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜியின் வாரிசாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன் அற்புத திறமையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

திரை உலகில் தன் தந்தையின் ஸ்டைலை பின்பற்றாமல் தனக்கு என்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி அந்த வகையில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவரது கன்னகுழியை பார்த்து பல பெண்கள் இவரை லைக் செய்தார்கள்.

இதனைத் தொடர்ந்து இவரது மகன் விக்ரம் பிரபு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து அவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். நடிகர் பிரபுவை பொறுத்தவரை 1982 ஆம் ஆண்டு வெளிவந்த சங்கிலி என்ற படத்தில் தான் அறிமுகம் ஆனார். 

மேலும் ஒரே வருடத்தில் ஆறு படங்களில் நடித்து சாதனை புரிந்த இவர் நடிப்பில் வெளிவந்த அதிசயப் பிறவிகள், சின்னஞ்சிறுசுகள், கோழி கூவுது போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 

அது மட்டுமல்லாமல் இயக்குனர் பி வாசுவின் இயக்கத்தில் வெளிவந்த சின்ன தம்பி திரைப்படம் தமிழக அரசு விருது இவருக்கு பெற்று தந்ததோடு நல்ல வசூலையும் வாரி கொடுத்தது. 

இந்நிலையில் கடந்த ஆண்டு பிடி சார் என்ற படத்தில் நடித்த பிரபு இந்த ஆண்டு அஜித் நடிப்பில் உருவாக உள்ள குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

கண் முன்னே நடந்த விஷயம்..! லேட்டஸ்ட் தகவல்..

தற்போது மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பி வந்திருக்கும் நடிகர் பிரபு தொடர்ந்து ஓய்வில் இருப்பதாகவும் அவருடைய குடும்பத்தார் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

இந்த தகவல் அவருடைய ரசிகர்களை ஒரு பக்கம் அதிர்ச்சி அடைய வைத்திருந்தாலும் மறுபக்கம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருப்பது ஆறுதலை தருவதாக சொல்லி இருக்கிறார்கள். 

மேலும் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டி வருவதாக ரசிகர்கள் பலரும் அவர்களுடைய கருத்துக்களை இணையதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருவதை அடுத்து விரைவில் பிரபு நலம் பெறுவார் என நம்பலாம். 

Summary in English: Actor Prabhu has just gone through a successful brain surgery, and we’re all breathing a sigh of relief! After what felt like an eternity in the hospital, he’s finally back home, where he can kick back and focus on his recovery. It’s such a relief to see him out of those sterile hospital walls and surrounded by the comfort of home.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.