நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இதை செஞ்சா உங்க ரெண்டு பேரையும் காலி பண்ணிடுவேன் என்று மிரட்டி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது இது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை சிறுவயது முதல் கொண்டே மழை கால திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
தமிழைப் பொறுத்தவரை இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த மகாநடி திரைப்படமானது இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.
இவர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் அந்த படத்தின் பிரமோஷனுக்கு கூட திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு கூடி செல்லாமல் பிரமோஷன் நிகழ்வுக்கு சென்று இருந்த விஷயம் இணையங்களில் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமண முடித்து ஒரு வார காலம் ஆகிவிட்டாலும் அவருடைய கல்யாணம் குறித்து பேச்சுக்களும் பரபரப்புகளும், சுவாரசியங்களுக்கும் குறைவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அத்தோடு இவர் தன்னுடைய பள்ளி காலத்தில் காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்காக பெற்றோர்களிடம் இருவரும் ஒரு கடுமையான போராட்டம் நடத்தி முழு சம்மதத்தோடு இவர்களது திருமணத்தை கோவாவில் குதூகலமாக நடத்தி அனைவரது ஆசியையும் பெற்றார்கள்.
இந்த திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவரிடம் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இதை செய்தால் உங்களை காலி செய்து விடுவேன் என மிரட்டியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் கோவாவில் இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெற்ற கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் தென்னிந்திய திரைப்படங்கள் தொடங்கி பாலிவுட் நட்சத்திரங்கள் வரை கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும் கீர்த்தி சுரேஷ் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் மலையாள திரை உலகில் பலரும் திரண்டு வந்து கீர்த்தியை வாழ்த்தியதோடு தமிழ் திரையுலகில் இருந்தும் பல்வேறு நடிகர்கள் நடிகைகள் இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.
இது குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தவெக தலைவரும் தளபதி விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் இணைந்து ஒரே விமானத்தில் பயணித்தது பரபரப்பை கிடப்பியதோடு இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து பேசும் பொருள் ஆனது.
இதுகுறித்து நடவடிக்கை தேவை என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது எந்த அளவுக்கு இந்த விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகர் சிம்புவின் மாநாட்டு படத்தில் ஹீரோயினியாக நடித்த பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டு தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை சொன்னதோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களது திருமணம் உங்களுடைய காதலை போல் மிகவும் அழகாக இருந்தது ஐ லவ் யூ.
நீங்கள் திருமணம் செய்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதோடு இந்த திருமண வைபவத்தில் நீங்கள் அழகாக இருந்தீர்கள் உங்களுடைய நான் அழும் புகைப்படங்களை நீங்கள் ரிலீஸ் செய்தால் உங்களை காலி செய்து விடுவேன் என பேரன்போடு பதிவிட்டு இருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆட்சி வருகிறது.
Summary in English: Weddings are a whirlwind of emotions, aren’t they? Just ask actress Kalyani, who hilariously asked her friend Keerthy not to release any photos of her crying on her big day. I mean, how relatable is that? We all know that weddings can bring out the waterworks—whether it’s happy tears or those bittersweet moments as you say goodbye to single life.