கேரளாவில் பூர்வீகமாகக் கொண்ட நடிகை நித்யா மேனன் சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட போது தன்னுடைய வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பது குறித்து பேசி இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அண்மையில் தமிழில் தனுஷோடு இணைந்து நடித்த திருசிற்றம்பலம் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
“எனக்கு அதுதான் பெருசு..” கூச்சம் இல்லாமல் பேசிய நித்யா மேனன்..
ஒரு நடிகையாக பொதுவெளியில் ஒரு பிரபலமாக இருக்கும் நான் இதை கூற கூச்சப்படவில்லை.
நான் என்னுடைய வாழ்க்கையை எப்போதும் கோபமாக என்னை விமர்சிப்பவர்களோடு சண்டை போட்டுக் கொண்டு என்னுடைய கருத்துக்கு மாற்றுக் கருத்து கொண்டு இருப்பவர்களோடு விவாதம் செய்து கொண்டு ஒரு இறுக்கமான மனநிலையில் வாழ விரும்பவில்லை.
இதையெல்லாம் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் என்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ரசிக்க விரும்புகிறேன். சந்தோசமாக வாழ விரும்புகிறேன். அதற்காக எனக்கு பிடிக்கவில்லை எனினும் செய்து கொண்டு வருகிறேன்.
எனக்கு இது ஒரு பெரிய விஷயம் என்று கூறியவர் சமீபத்தில் தேசிய விருது வாங்கும் போது கூட இவர் அதற்கு தகுதியானவர் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது.
திருச்சிற்றம்பலம் படத்தைக் காட்டிலும் எத்தனையோ நல்ல திரைப்படங்கள் வந்திருக்கிறது. அதில் எத்தனையோ நடிகைகள் நல்ல முறையில் நடந்து நடித்திருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது நித்யா மேனனுக்கு எதற்காக இந்த தேசிய விருது கொடுக்கப்பட்டது என்று இணைய பக்கங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளி வந்தது.
ஆச்சரியத்தில் ரசிகர்கள்..
இப்போது நித்யா மேனன் இது என்னுடைய படத்திற்கான விருது மட்டும் கிடையாது. எத்தனை நாள் நான் கடந்து வந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்று கூறி இருக்கிறார்.
அதாவது தனது ஒட்டுமொத்த திரை பயணத்திற்கான விருது தான் இது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கும் இவர் ஒரு படத்துக்காக இந்த விருது கிடைக்கவில்லை என்று பேசியது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
மேலும் இது குறித்து விமர்சிப்பவர்களுக்கு எந்த பதிலும் கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் விரும்பும் நடிகைகளுக்கு கண்டிப்பாக ஒருநாள் விருதும் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
இதனுடைய வெளிப்பாடாகத் தான் தன்னுடைய வாழ்க்கை எப்போதும் போர்க்களமாக தான் பார்க்க விரும்பவில்லை என்றும் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் என்று பூடகமாக நித்யா மேனன் பேசியிருக்கிறார் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Summary in English: Actress Nithya Menen recently shared some insightful thoughts on her approach to life, especially when it comes to dealing with trolls and critics. It’s no secret that being in the spotlight can be a double-edged sword; while fame brings adoration, it also attracts negativity. Nithya emphasizes the importance of staying true to oneself and not letting the opinions of others dictate your self-worth.