தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி பற்றி அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் அண்மை பேட்டியில் தெரிவித்திருக்க கூடிய விஷயம் குறித்து பார்க்கலாம்.
பிரபல நடிகையாக திகழும் அதிதி ராவ் ஹைதாரி தற்போது தமிழ் நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இவர் அண்மையில் நடிகை மனிஷா கொய்ராலா குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து இந்த பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் சாரதா ராமநாதன் இயக்கத்தில் வெளி வந்த சிருங்காரம் என்ற திரைப்படத்தில் நடித்ததலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு காற்று இடைவெளி என்ற திரைப்படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தை அற்புதமாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்துக் கொண்டதோடு தமிழ் திரை உலகில் நல்ல அறிமுகம் கிடைத்தது.
இதை அடுத்து தமிழ் திரை உலகில் குறிப்பிடும் படியான ரசிகர் பட்டாளத்தை பெற்ற இவர் செக்கச் சிவந்த வானம், ஹே சுனாமிக்கா உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி என பழமொழி படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 2002 ஆம் ஆண்டு சத்யாதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில் 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று விளக்கினார்.
இதனை அடுத்து சினிமாவில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வரக்கூடிய இவர் 2024-ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சித்தார்த் சூரிய நாராயணனை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அண்மை பேட்டையில் தான் பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலாவை பார்த்தேன் என்று சொல்லி இருக்கிறார்.
இதன் மூலம் அவர் மீது கிரேஸ் ஏற்பட்டதாகவும் அவருடைய அழகை அழகாய் வர்ணித்து தள்ளியதோடு அவரால் கவரப்பட்டதாகவும் சொன்ன அவர் அவரை சினிமாவில் பார்த்த பிறகுதான் தனக்கும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார்.
இன்னும் ஒரு படி மேலே சொன்னால் பம்பாய் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் அப்படியே மூழ்கி போய் இருந்த எனக்கு மனிஷா கொய்ராலா என்றாலே மனதில் சிறகு விரித்து பறக்க ஆரம்பிப்பது போன்ற எண்ணம் ஏற்படும்.
எனவே சினிமாவில் மனிஷா கொய்ராலாவை பார்த்தாலே நடிக்க வேண்டும் என்ற மூடு வந்தது. சினிமா ஆர்வம் இல்லாமல் இருந்த எனக்கு அவரது திரைப்படங்களை பார்த்து தான் இந்த ஆர்வம் வளர்ந்தது.
சினிமாவில் நடிப்பதற்கு ஆசையை தூண்டி விட்ட நடிகை மனிஷா கொய்ராலா என்பதை ஓபன் ஆகவும் கூச்சம் இல்லாமல் நடிகை அதிதி ராவ் பேசியிருப்பது ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Summary in English: Aditi Rao Hydari recently opened up about her admiration for the legendary Manisha Koirala, especially reflecting on her unforgettable performance in the film “Bombay.” Aditi shared that watching Manisha on screen was nothing short of mesmerizing. She highlighted how Manisha’s portrayal of a strong, yet vulnerable character left a lasting impact on her as an actress and as a fan.