தமிழ் சினிமாவில் மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து வசூலை வாரி குவித்த நடிகர் ராமராஜன் குறித்து தெரியாத உண்மைகள் பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய தளபதி விஜய், தல அஜித், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுக்கு ராமராஜன் என்ற நடிகரின் ஆளுமை என்ன என்று தெரிந்திருக்குமா என்று கேட்டால் சந்தேகம்தான்.
இதற்கு காரணம் 20 வருடங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் அனைவரும் உச்சரித்த ஒரே பெயர் ராமராஜன். இவரை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று ஏங்கித் தவித்த இயக்குனர்கள் பலர் உண்டு.
இவர் ரோஸ் பவுடர், லிப்ஸ்டிக் கலர் கலரான சட்டை போட்டுக்கொண்டு மாட்டை நினைத்து பாட்டு பாடுவது, ஆட்டுக்குட்டியை துண்டு போல தோலில் போட்டுக்கொண்டு ஒரு கிராமத்தானாக தன்னை அடையாளப்படுத்தி வெற்றி பெற்ற நடிகர்.
இவர் சினிமாவிற்காக பொதுப்பணித்துறையில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு வந்தவர். தன்னுடைய படங்களில் பெரும்பாலும் மது குடிப்பது, சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காத நல்ல கலைஞர்.
இவர் ஒரே நேரத்தில் 40 படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி சினிமாவில் உச்சாணி கொம்பில் இருந்த சக்கரவர்த்தி. இதனைக் அடுத்து இவரது ரசிகர்கள் அனைவரும் இவரை மக்கள் நாயகன் ராமராஜன் என்றே அழைத்தார்கள்.
இவர் 1958 ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் கிராமத்தில் வெள்ளையம்மாள், இராமையா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர்.
இவருடைய அப்பா ஒரு நாடக நடிகராக இருந்தார். இதனால் இவர் பிறந்த சில வருடங்களிலேயே குடும்பம் முழுவதும் சிவகங்கை இருந்து மதுரை மேலூருக்கு குடி பெயர்ந்தது.
எனவே இவர் மேலூர் அரசு பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்து அங்கு இருந்த அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த நிலையில் இவருக்கு சினிமாவின் மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம் இருந்தது.
இந்நிலையில் தான் இவர் ஊரில் தொடங்கப்பட்ட அப்பல்லோ நாடக கலா மன்றம் என்ற நாடகக் குழுவில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் ஆசையின் விளைவு, இன்பம் முறிவு போன்ற நாடகங்களில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
பண்ணையார் மகள் என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்து பாராட்டுதல் பெற்றதை அடுத்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது.
எனவே சினிமாவில் நடிப்பதற்காக சென்னை செல்ல வேண்டும் என்று எண்ணிய அவர் அங்கு யாரையும் தெரியாது என தயங்கிய சமயத்தில் நண்பர் ஒருவரின் மூலம் சிட்டி சென்டர் திரையரங்கில் வேலைக்கு சேர்ந்தார்.
அங்கு மேனேஜர் ஆபரேட்டர் என அனைத்து வேலைகளையும் செய்து வந்த ராமராஜன் வெறும் 22 ரூபாய் சம்பளமாக பெற்றார். இதை அடுத்து சம்பளம் போதாத காரணத்தால் புதிதாக திறக்கப்பட்ட கணேஷ் திரையரங்கில் 90 ரூபாய் சம்பளத்திற்காக சேர்ந்திருந்தார்.
மேலும் சினிமாவில் பிணமாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து விட வேண்டும் என்ற உறுதியோடு வாய்ப்பினை தேடி வந்த இவர் தினமும் மூன்று ஷோ எம்ஜிஆர் படங்களை பார்த்து வந்த இவர் அவரைப்போல கலர் கலராக சட்டை போட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
மேலும் திரைப்பட போஸ்டர்கள் திரைப்படப் பெட்டிகள் வாங்குவதற்கு அடிக்கடி மதுரை சென்று வந்த இவருக்கு திரைத்துறையினரோடு பழக்கம் ஏற்பட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராமநாராயனிடம் உதவி இயக்குனராக வேலையில் சேர்ந்தார்.
அத்தோடு 30 மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிந்த இவர் 1977 ஆம் ஆண்டு ராமநாராயணன் தயாரித்த மீனாட்சி குங்குமம் படத்தில் ஒரு சிறு கேரக்டரோட செய்தார்.
இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய சட்டத்தை திருத்துங்கள் என்ற படத்தில் உதவி இயக்குனராக இருந்து கொண்டே சின்ன, சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் 1985 ஆம் ஆண்டு நடிகர் பாண்டியராஜன் இளவரசி நடிப்பில் வெளிவந்த மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக முதல் முதலில் அறிமுகமானார்.
முதல் படமே வெற்றியை எடுத்ததை அடுத்து ஹலோ யார் பேசுறது என்ற படத்தை இயக்கிய ராமராஜன் இந்த ஹலோ யார் பேசுறது என்ற படத்தை பார்த்த பாரதிராஜா ராமராஜனிடம் தனக்காக ஒரு படத்தை இயக்கும்படி வேண்டிக்கொண்டார்.
அப்படி இயக்குனர் பாரதிராஜா உடன் ராமராஜனுக்கு நல்ல பழக்கம் ஏற்பட அவர் கங்கை அமரனிடம் துணை இயக்குனராக இருந்து வந்த அழகப்பன் என்பவர் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் நடிக்க நாயகனை தேடி வருவதாக கூறியிருக்கிறார்.
அத்தோடு அந்தப் படத்தில் ராமராஜன் நடித்த பொருத்தமாக இருக்கும் என்று பரிந்துரை செய்ததை அடுத்து 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்.
இதன்பிறகு அவரது வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியவில்லை. தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக உருவெடுத்து தமிழ் சினிமாவின் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.
Summary in English: Ramarajan is a name that brings back a wave of nostalgia for many Tamil cinema fans. Remember those late-night movie marathons where his films were the highlight? With his unique style and captivating performances, Ramarajan truly carved out a special place in the hearts of audiences during the late ’80s and early ’90s. His ability to connect with viewers through relatable characters and catchy songs made him a household name.