ஹாலிவுட் திரை உலகில் நம்பர் ஒன் இசை அமைப்பாளராக மாறி இருக்கும் அனிருத் கமல், ரஜினி, விஜய், அஜித் என வரிசையாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்ததை அடுத்து தற்போது தெலுங்கில் பெரிய ஹீரோவிற்கு இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது அது பற்றி பார்க்கலாம்.
இதுவரை தெலுங்கு படங்களில் இசை அமைப்பதை தவிர்த்து வந்த இசையமைப்பாளர் அனிருத், ஜவான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர்.
சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய உறவினரான அனிருத் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை இன்னும் விமர்சன ரீதியாக நல்ல வரவைப்பை பெற்று தந்தது.
முதல் படத்திலேயே தன்னுடைய அற்புத இசையால் அனைவரையும் கவர்ந்த இவர் ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
இதை அடுத்து படங்களுக்கு இசையமைக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர வணக்கம் சென்னை, டேவிட், எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி, வேதாளம் போன்ற படங்களுக்கு இசை அமைத்து ஹிட்டான இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார்.
மேலும் குறுகிய காலத்திற்குள்ளேயே டாப் 10 இசையமைப்பாளர்களின் லிஸ்டில் தன் பெயரை பதித்த இவர் இன்னும் பல வருடங்களுக்கு இசை ஆட்சி செய்வார் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.
அனிருத்தின் இசை குறித்து கலவை ரீதியான விமர்சனங்கள் வெளிவந்து உள்ளது. இந்நிலையில் இவரது இசை அமைப்பில் கூலி, ஜெய்லர் 2, விடா முயற்சி போன்ற படங்கள் விரைவில் வெளிவர உள்ளதால் இவரது சம்பளமும் பத்து கோடி ரூபாய்க்கு மேல் பெறுவதாக தெரியவந்துள்ளது.
அனிருத் ஏற்கனவே தெலுங்கில் தேவாரா படத்தின் முதல் பகுதிக்கு இசையமைத்ததை அடுத்து தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஓட்டேலா இயக்கத்தில் நானி தயாரிப்பில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க இருக்கக்கூடிய படத்திற்கு இசை அமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாம்.
இதைத்தொடர்ந்து இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரும் என டோலிவுட் வட்டாரத்தில் இருந்து விஷயங்கள் கசிந்து வந்ததை அடுத்து தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் படத்தை அனிருத் கைப்பற்ற ஆரம்பித்து விட்டாரே என்று கமெண்ட்கள் அதிக அளவு வருகிறது.
Summary in English: Exciting news for all the Chiranjeevi fans out there! The legendary actor is set to star in a new movie, and guess what? Anirudh Ravichander, the talented music composer known for his catchy tunes and vibrant soundtracks, will be composing the music for this much-anticipated film.