தெலுங்கு நடிகையான நடிகை அனுஷ்காவின் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பேசப்பட்ட விஷயம் குறித்த சுவாரசியமான தகவலைத்தான் இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ள போகிறீர்கள்.
நடிகை அனுஷ்கா தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை என்று சொன்னால் மிகையாகாது.
இவரின் instagram-ல் இரண்டே இரண்டு ஹீரோக்களை மட்டும்தான் பின் தொடர்ந்து வருகிறார். ஆனால் அதில் பிரபாஸ் இல்லை. வேறு அந்த இரண்டு ஹீரோக்கள் யார் என்ற விவாதம் தற்போது இணையத்தில் பற்றி கொண்டுள்ளது.
அனுஷ்கா டோலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் நிலையில் தமிழிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் நாகார்ஜுனா நடித்த சூப்பர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான அனுஷ்கா தன்னுடைய முதல் படத்திலேயே தெலுங்கு ரசிகர்களை எளிதில் ஈர்த்து விட்டார்.
இவர் தமிழ் இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரெண்டு என்ற திரைப்படத்தில் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான இந்த திரைப்படம் இவருக்கு மிகச்சிறந்த அறிமுகத்தை தமிழில் தந்தது.
இதைத் தொடர்ந்து ஹீரோயினியாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்த அனுஷ்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 11 பேரில் மட்டும் பின் தொடர்ந்து வருகிறார். இதில் இரண்டே இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படும்.
ஆனால் இந்த இரண்டு நடிகர்களும் அனுஷ்கா காதலிக்கின்ற நபர்கள் என்ற கிசு கிசுக்கள் வெகுவாக வெளிவந்தாலும் அதில் நடிகர் பிரபாஸ் இல்லை என்பதுதான் ட்விஸ்ட்.
இதற்குக் காரணம் நடிகை அனுஷ்காவும், நடிகர் பிரபாஸ்சும் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக தகவல்கள் அதிகளவு கசிந்து வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இதை இவர்கள் இருவருமே மறுத்து இருந்த விஷயமும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்திக் கொண்டனர். இது பிரபாஸ் ரசிகர்களுக்கும், அனுஷ்கா ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
மேலும் பாகுபலி திரைப்படத்தில் இருவருடைய ஜோடியும் அந்த அளவிற்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டதோடு இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு இவர்கள் இருவரும் காரணம் என்று சொல்லலாம்.
எல்லாம் சரி அப்படி என்றால் அனுஷ்கா யாரைத்தான் பின்தொடர்கிறார் என்ற எண்ணம் உங்களுக்குள் ஏற்படலாம். அந்த இரண்டு நடிகர்கள் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
அந்த இரண்டு நடிகர்களில் ஒருவர் ராணா டகுபதி பாகுபலி படத்தில் இவர் வில்லனாக நடித்திருக்கிறார். மற்றொரு நடிகர் மலையாள நடிகர் துல்கர் சல்மான்.
தற்போது இணையதள பக்கத்தை பொறுத்த வரை அனுஷ்காவை பின் தொடரக்கூடியவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி இருக்கிறது. பல்வேறு பிரபலங்கள் நடிகை அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் தான் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விசயமாக மாறி உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது நடிகை அனுஷ்கா பின் தொடரும் நபர்களின் எண்ணிக்கை 11 இல் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது.
இதை அடுத்து அந்த மற்றொரு நபர் யார் என்று நீங்கள் நினைக்கலாம். அந்த நபர் வேறு யாருமில்லை நீங்கள் நினைப்பது போல் நடிகர் பிரபாஸ் தான். இணைய பக்கங்களில் பிரபாஸை அனுஷ்கா பின் தொடர்வதில்லை என்ற பேச்சுக்கள் அண்மையில் எழுந்ததை அடுத்து திடீர் என அவரை பின்தொடர்ந்து இருக்கிறார் அனுஷ்கா.
இதுவரை சுமார் 48 படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது ஒரு மலையாள படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு விரைவில் திருமணம் என்ற தகவல்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இவர் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று பல ரசிகர்கள் ஆவலாக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
Summary in English: Did you catch the latest buzz about Anushka’s Instagram? It turns out she’s been following just 12 members, and fans are super curious about who made the cut! From fellow actors to close friends, her exclusive list has sparked all sorts of speculation. It’s interesting to see how selective she is with her follows, giving us a glimpse into her inner circle. Who do you think is on that list? Whether it’s for collaboration or just keeping it tight with friends, Anushka definitely knows how to keep things intriguing on social media!
—