பிக் பாஸ் போட்டியாளரான ரித்விகாவிடம் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு என்ன கிடைத்தது என்ற கேள்வி எழுப்பப்பட்ட சமயத்தில் என்ன கூறினார் என்பது குறித்த பதிவு.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை கடந்த ஏழு சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த எட்டாவது சீசனை மக்கள் செல்வன் தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரித்விகாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் உங்களுக்கு கிடைத்தது என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில கிடைச்சது இதுதான்..
இந்தக் கேள்விக்கு பதில் அளித்து பேசிய நடிகை ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு நிறைய பணம் கிடைத்தது. நான் பொருளாதார பிரச்சனைகள் சிக்கி இருந்த சமயத்தில் இதன் மூலம் எனக்கு அந்த பிரச்சனை தீர்ந்தது என்று கூறியிருக்கிறார்.
மேலும் பல பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி இருந்த இவர் இஎம்ஐ கட்டுவதையே தன்னுடைய வாடிக்கையாகக் கொண்டு இருந்தவை அடுத்த தன்னுடைய சம்பளம் முழுவதும் இ எம் ஐ யில் கழிந்து விட்டதாகவும் சொல்லிவிட்டார்.
அத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கிடைத்த வருமானம் தன்னுடைய இ எம் ஐ பிரச்சனையை தீர்த்துக் கொடுத்தது. தற்போது படங்களில் நடித்து வரும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள சென்றேன்.
இதனால் நான் நடித்த சில திரைப்படங்கள் அந்த நேரத்தில் ரிலீஸ் ஆகாமல் இருந்தது இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது இதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை மனதார ஏற்றுக்கொண்டு அதில் பங்கேற்க சென்றேன் டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வு செய்யப்பட்டேன். நமக்கு பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இல்லாத போது அதற்கான வழிகள் ஏதேனும் நம் கண்ணில் தென்பட்டால் அதை நாம் வேண்டாம் என்று சொல்வோமா? இல்லை மறுப்போமா?
நடிகை ரித்விகா ஷாக்கிங் டாக்..
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசனே இதை ஒப்புக் கொள்கிறார் நான் நடித்த படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன எனக்கு வருமானம் இல்லை என்று நான் கூறிய போது அப்பா நீங்க நம்ம ஆளு என்று கூறினார்.
இந்த நிலையில் அவருடைய படங்களும் சில வெளியாகாமல் இருந்தது சில படங்கள் தோல்வி அடைந்தன அவருக்கும் பொருளாதார ரீதியாக ஒரு அடிஷனல் இன்கம் தேவைப்பட்டபோது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தன்னுடைய பணியை மேற்கொண்டு இருக்கிறார்.
இவ்வளவுதான் விஷயம் ஆனால் தற்போது நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்தால் ஏதோ ஸ்கிரிப்ட் எடுத்து செய்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கே வருகிறது அந்த அளவுக்கு தான் இருக்கிறது.
மற்றபடி நடிகர் விஜய் சேதுபதி, உலகநாயகன் இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்கள் என்று தான் கூறுவேன். இப்படி அசத்தலான பதிலை சொல்லி அனைவரையும் பிக் பாஸ் ரித்விகா அதிரவிட்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து இந்த விஷயமானது இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
Summary in English: Rythvika, the vibrant contestant from BiggBoss, recently spilled the tea on how her time in the house was nothing short of a game changer! She shared that getting a spot on the show didn’t just catapult her into the limelight; it also opened up some serious financial doors for her. Imagine going from being just another face in the crowd to becoming a household name overnight!