Wednesday , 22 January 2025

வெட்டியா? எதுக்கு அரசியல் போர்வை.. விஜய்யை வெளுத்து வாங்கும் ப்ளூ சட்டை மாறன்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் அரசியலில் களம் இறங்க தமிழக வெற்றிக்கழகத்தினை ஆரம்பித்ததை அடுத்து அரசியலில் அவரது பருப்பு வேகவில்லை. அவரது செயல்பாடுகள் சோபிக்கவில்லை என ப்ளூ சட்டை மாறன் விஜயை விமர்சித்து இருப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ப்ளூ சட்டை மாறன் பற்றி அதிக அளவு சொல்ல தேவையில்லை. இவர் தனது எக்ஸ் தள பதிவில் பலரது கவனத்தையும் ஈர்க்கக்கூடிய வகையில் சில கருத்துக்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் சட்ட ஓழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, புயல் நிவாரணம் உள்ளிட்ட பல குறைபாடுகள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறார் தளபதி விஜய்.

வெட்டியா? எதுக்கு அரசியல் போர்வை..

அத்தோடு தனது முதல் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள், அரசியல் சாசன சட்ட விரோதமாக இருப்பதால் ஆளுநர் பதவி தேவையா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் வைரலானது. அது மட்டுமல்லாமல் அண்ணா பல்கலை சம்பவத்திற்கு எதிராக பலரும் வீதி வந்து போராடி இருக்கிறார்கள். 

ஆனால் இது போன்ற விஷயங்களில் விஜய் எந்தவிதமான போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. இவரிடம் இருந்து அதற்கு உரிய சம்பிரதாய அறிக்கை மட்டுமே வெளிவந்துள்ளது. 

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனம் மூலம் பாஜகவை மறைமுகமாக கிண்டல் அடித்த விஜய் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத் தொடர்ந்து ரெய்டு வந்த பிறகு சர்க்கார் ஆடியோ லான்ச் ரெய்டு இல்லாத வாழ்க்கை வேண்டும் என்றும் கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று கூறியிருந்தார் .

விஜய்யை வெளுத்து வாங்கும் ப்ளூ சட்டை மாறன்..

அதுபோல நடந்து முடிந்த தனது முதல் மாநாட்டில் பகவத் கீதை நூலை அன்பளிப்பாக பெற்றுக்கொண்டு 95% திமுகவை மட்டுமே தாக்கக்கூடிய வகையில் பேசி இருந்தார். மேலும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி மகா பெரியவரை நல்லவர் என ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். 

ரமணர், சாய்பாபா உள்ளிட்ட பல துறவிகள் இருந்தும் அவர்களின் ஒருவரின் பெயரைக் கூட சேர்த்துச் சொல்லவில்லை. இதற்குப்பின் பேச வந்த விஷயம் இது பற்றி எதுவும் பேசவில்லை வழக்கம் போல திமுக வைத்தான் தாக்கக் கூடிய வகையில் பேசினார். 

இந்நிலையில் இன்று ஆளுநரை சந்தித்தது வரை விஜய் பாஜக தலைவர்களுக்கு தூக்குவாளியாக செயல்படுவது போல இருப்பதாகவும் தன்னுடைய எதிரி திமுக தான் அதாவது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் முழங்கியவர். 

ஆனால் இவர் எதற்காக இப்படி அரசியல் சாயம் பூசிக்கொண்டு நடிக்க வேண்டும். இந்த அரசியல் போர்வை இவருக்கு சுத்தமாக பொருந்தவில்லை என்று ப்ளூ சட்டை மாறன் தளபதி விஜய் விளாசித் தள்ளி இருக்கிறார். 

Summary in English: In a recent fiery exchange, blue-sattai-maran took to social media to slam Vijay and the TVK, calling them the “B team of BJP.” It’s not your usual political banter; Maran backed up his claims with some real incidents that got everyone buzzing.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.