தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் பிரியா பவானி சங்கர் ஜீப்ரா படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொள்ளாததை அடுத்து தயாரிப்பாளர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக இந்த படத்தின் கதாநாயகி பிரியா பவானி சங்கர் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த நிகழ்வானது தற்போது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளதோடு பிரமோஷனுக்காக நடிகைகள் மற்றும் நடிகர்கள் பல்வேறு நிபந்தனையை விதிப்பதாக தயாரிப்பாளர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் குறிப்பிட்ட ஆடைகள் அணிந்து குறிப்பிட்ட பத்திரிகைகளுக்கு மட்டுமே பேட்டி கொடுக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை அவர்கள் விதிப்பதாக சொன்னதோடு புதிய தயாரிப்பாளர்கள் இதுபோன்ற நிபந்தனைகளை விதிக்கும் நடிகர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக் கொண்டார்.
அந்த வகையில் பிரியா பவானி சங்கர் பிரமோஷனுக்கு வரவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தவர் பிரியா பவானி சங்கர் நியூசிலாந்தில் படப்பிடிப்பில் இருந்த காரணத்தால் வர முடியவில்லை.
மேலும் அவரை அழைத்து வர வேண்டுமென்றால் அதற்கு விமானச் செலவு தங்கும் இடம் உட்பட 15 முதல் 20 லட்சம் வரை செலவாகும். அந்த பணத்தை படத்தின் பிரமோஷனுக்கு பயன்படுத்திக்கலாம் என்று தான் முடிவு செய்ததாக கூறியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் தனது விவாதத்தில் நடிகைகள் வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்து பிரமோஷனுக்காக வரவழைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு விமானச் செலவு, தங்கும் செலவு போன்றவை கொடுக்கப்படுவது மிச்சமாகும் என்றும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் இவ்வாறு செய்வது நியாயமா? என்ற கேள்வியை முன்வைத்து உள்ளது.
இவர் தயாரிப்பாளரின் இந்த பேச்சாளர் தற்போது ரசிகர்களின் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதோடு ப்ரோமோஷன் குறித்த அணுகுமுறை பற்றி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து பிரியா பவானி சங்கர் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத நிலையில் இதற்கு உரிய பதிலை அளித்தால் விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
அந்த வகையில் ஜீப்ரா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்வில் தயாரிப்பாளர் தெரிவித்த கருத்துக்கள் நடிகைகள் மற்றும் அவர்களுக்கு இடையே உள்ள உறவு பிரமோசனின் முக்கியத்துவம் குறித்து புதிய விவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இது தற்போது பேசும் பொருளாய் இணையம் முழுவதும் வியாபித்து விட்டது.
Summary in English: Priya Bhavani Shankar has been making headlines lately, and not just for her acting chops! The buzz around her latest project, “Atrocities in Zebra,” has everyone talking. This film dives deep into some serious themes, exploring societal issues that resonate with many.