லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் நடிகர் தனுஷ் இடையே நிலவக்கூடிய பிரச்சனைகள் அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்திருக்கும். இதனை அடுத்து தனது திருமண ஆல்பத்தை வெளியிட நயன்தாரா செய்த மட்டமான வேலை குறித்து இந்த பதிவில் படிக்கலாம்.
இந்தப் பிரச்சனையின் ஆழம் என்ன எதனால் இருவர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது என்பதை குறித்து பலருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பு, காதல், பணமோகம், காப்புரிமை சர்ச்சை இவைதான் பிரச்சினைக்கு முக்கிய காரணங்கள்.
இந்தப் படத்தை தயாரிப்பதற்காக விக்னேஷ் சிவன் தனுசுடன் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட் கேட்டிருக்கிறார். ஆனால் படப்பிடிப்பின் சமயத்தில் நயனுடன் ஏற்பட்ட காதலால் படப்பிடிப்பை பட்டென்று முடித்து விடாமல் நயனை தொடர்ந்து சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் இருந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் படமாக்கிய காட்சிகளையே திரும்ப படமாக்க வேண்டும் அப்போதுதான் நன்றாக இருக்கும் என்ற பெயரில் படப்பிடிப்பை நீட்டித்து நாட்களை நகர்த்தியதின் மூலம் நயனுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார்.
மேலும் தன்னுடைய காதல் சக்சஸ் ஆவதற்காக தனுஷின் பணத்தை செலவு செய்ததை அடுத்து விக்னேஷ் சிவன் நான்கு கோடியில் ஆரம்பித்த பட்ஜெட் 17 கோடி வரை இழுத்துச் சென்றுள்ளது.
அதாவது விக்னேஷ் சிவன் சொன்ன பட்ஜெட்டை விட 13 கோடி அதிகளவு செலவு செய்ததை அடுத்து கடைசியாக இரண்டு கோடி செலவாகும் என்று கேட்க கடுப்பான தனுஷ் இனிமேல் படத்துக்கு பணம் தர மாட்டேன். நான் இதை டிராப் செய்கிறேன் என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டார்.
ஆசை ஆசையாய் எடுத்த படத்தை கடைசியாக வெளியிடாமல் போனால் காதல் என்னாகுமோ என்று பயந்து விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களுடைய சொந்த பணம் 2 கோடி ரூபாயை போட்டு படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து படம் வெளிவந்த பிறகு இந்த படத்தை கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் செலவை இழுத்து விட்டதால் படத்தில் உரிமையை நயந்தாராவிற்கு கொடுக்காமல் தனுஷ் மறுப்பதற்கு இதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அட அவ்வளவுதான் இன்னும் நீங்க நினைக்காதீங்க.. கதை இனியும் முடியல இனிமே தான் ஆரம்பிக்குது. ஆமாங்க இதற்குப் பின்னால் காது கூசக்கூடிய சம்பவங்கள் நடந்திருக்கு.
அந்த விவகாரம் என்னவென்றால் தனுஷ் தங்களுக்கு பிரச்சனையாக்கி விட்டதால் இனிமேல் அவரிடம் அனுமதி கேட்டால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று குறுக்குத் தனத்தில் திருட்டு வேலைகளை செய்து இருக்கிறார்கள் நயனும் விக்னேஷ் சிவனும்.
நடிகர் தனுஷின் உதவியாளர் மற்றும் விக்னேஷ் சிவன் மிகச்சிறந்த நண்பர்கள் என்பதால் அந்த நட்பை பயன்படுத்திக் கொண்டு வொண்டர் நிறுவனத்தின் ஈமெயில் முகவரியில் தங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அந்த NOC ஐ அனுமதியை அனுப்பி விடுமாறு பேசி குறுக்கு வழியில் வேலையை முடிக்க பேசி இருக்கிறார்கள்.
ஆனால் அந்த நண்பரோ இது தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்டதை என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. தனுஷிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அனுப்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதை அடுத்து குறுக்கு வழியில் திருட்டுத்தனமாக அனுமதி பெற யோசித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது கடுமையான கோபத்தில் தனுஷ் இருக்க எத்தனையோ பிரபலங்களை வைத்து தனுஷிடம் NOC கேட்டும் அவர் மறுத்திருக்கிறார். இதுதான் பிரச்சினைக்கு காரணம்.
எனவே இந்த பிரச்சனை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பதை கேள்வி குறி உள்ள நிலையில் விரைவில் இதற்கான தீர்வு எப்போது கிடைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Summary in English: It looks like the buzz around Nayanthara and Dhanush’s No Objection Certificate (NOC) issue has everyone talking! For those who might not be in the loop, this whole situation revolves around some paperwork that’s become a hot topic among fans and industry insiders alike.