சென்னையில் மாநில அரசின் வழிகாட்டி அமைப்பான கைடன்ஸ் தமிழ்நாடு மற்றும் கிரியேட்டர்ஸ் ஒர்க்ஸ் அமைப்பு இணைந்து ஜி சி சி நெக்ஸ்ட் சமிட் 24 என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் உறுப்பினராக சென்னை மாற உள்ளதாக வெளிவந்த தகவல்.
சிங்காரச் சென்னை தமிழ்நாட்டின் தலைநகராக திகழ்வது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இங்கு 2025 முதல் 2026 ஆம் ஆண்டுக்குள் 12 முதல் 13 மில்லியன் சதுர அடி அளவிலான பிரீமியம் அலுவலக கட்டிடங்கள் உருவாகலாம் என்ற விஷயத்தை சிபிஆர்இ வெளியிட்டுள்ளது.
மேலும் குளோபல் கெப்பாளிட்டி சென்டர் என அழைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் திறன் மையங்கள் சென்னையில் அதிக அளவு அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும்.
இது போன்ற திறன் மையங்களில் பணி செய்ய சர்வதேச தரத்திலான திறன் பெற்ற பணியாளர்களில் 11 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர் என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தற்போது 250 ஜிசிசி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இது 450 முதல் 460 வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்தியாவில் தற்போது Gcc மையங்களுக்கான அலுவலக கட்டடங்களை லீசுக்கு வழங்குவதில் பெங்களூரு முதல் இடத்திலும் ஹைதராபாத் இரண்டாவது இடத்திலும் சென்னை மூன்றாவது இடத்திலும் உள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகளுக்கான அலுவலக இடங்கள் சென்னையில் கண்டிப்பாக ஒதுக்கப்படும். அதுவும் 1.4 மில்லியன் சதுர அடியில் இருந்து 2.3 மில்லியன் சதுர அடியாக அது உயர வாய்ப்புகள் உள்ளது.
அது போல இந்த இடங்களில் பணி செய்ய பணியாளர்கள் கிட்டத்தட்ட 1.4 மடங்கு எண்ணிக்கையில் அதிகரிக்கப்படுவார்கள் என்று வெளி வந்த தகவல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சென்னையை பொறுத்த வரை 67% அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் உள்ளது என்று ஓர் ஆய்வு கூறியுள்ள நிலையில் ஓஎம்ஆர் சாலை மவுத் பூந்தமல்லி ஹை ரோடு மற்றும் பிடி சாலை ஆகிய இடங்களில் தான் gcc மையங்கள் அதிகளவு அலுவலகங்களை வீசு கெடுத்துள்ளது.
இதைத்தொடர் 2030 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும் கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் உற்பத்தி மையங்கள் வளர்ச்சி அடைந்துள்ளதாக கருத்துக்கள் வெளி வந்துள்ளது.
Summary in English: Chennai is really stepping up its game and becoming the go-to hub for global corporations looking to set up shop in Tamil Nadu. With its vibrant culture, skilled workforce, and strategic location, it’s no wonder that businesses are flocking to this bustling city.