நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மீண்டும் இணைந்து வாழ விரும்புவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் வெளி வந்து ட்ரெண்டிங் ஆக்கி உள்ளது.
பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு திரை பிரபலங்களில் குறிப்பாக நட்சத்திர தம்பதிகள் இடையை ஏற்படும் விவாகரத்துக் குறித்து தன்னுடைய பொதுவான கருத்தை யூடியூப் வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
இந்தப் பதிவில் நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையை தன்னுடைய மாமனார் ரஜினிகாந்த், முன்னாள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து தனுஷ் கொண்டாடியிருப்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுக்கு இவ்வளவு நாடகமா..?
சமீபத்தில் வெளிவந்த மெய்யழகன் திரைப்படத்தை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஜோடியாக சென்று பார்த்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது ஒரு பக்கம் மகிழ்ச்சியான விஷயம் என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு முன்பு ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவருடைய திருமணம் விவாகரத்து குறித்து எதற்கு இப்படி தூக்கி வைத்து பேச வேண்டும் என பல விமர்சனம் செய்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம் என்று நான் சொல்கிறேன். பிரபலங்கள் அவர்களுடைய விவாகரத்து என வரும் போது அதை நாம் ஏன் பேசும் பொருள் ஆக்கிறோம் என்றால் அந்த பிரபலங்கள் சாதாரண ஆட்கள் கிடையாது.
இவர்கள் பிரபலமாக இருப்பதால் லட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான நபர்கள் இவரை பின்தொடருவார்கள். அத்தோடு பிரபலங்களின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற எந்த ஒரு விஷயத்தையும் முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு பல ரசிகர்கள் பின் தொடர வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதை அடுத்து தனுஷ் விவாகரத்து செய்யக்கூடிய பட்சத்தில் என் தலைவனே விவாகரத்து பண்ணிட்டான். எனக்கெல்லாம் இது பெரிய மேட்டரா? என்று அவர்களின் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் நகர்வதற்கு 100% வாய்ப்பு உள்ளது.
கிழவன திருமணம் பண்ணி ஒரே வீட்டில் ஐஸ்வர்யா தனுஷ்..
இப்படி ரசிகர்கள் தங்கள் வாழ்க்கை பாதையை மாற்றிக்கொள்ளக் கூடாது என்பதற்குத்தான் அவர்களின் விவாகரத்து குறித்து விரிவாக பேசுகிறோம். நான் மட்டுமல்ல மீடியாவை சார்ந்த பலரும் பேசுகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகை திவ்யா ஸ்ரீதர் கூட கிரிஷ் வேணுகோபால் என்ற தன்னைவிட வயதில் மூத்த நபரை திருமணம் செய்து கொண்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இந்த நடிகை அவரை திருமணம் செய்து கொண்ட போது ஒரு கிழவனை கல்யாணம் பண்ணி இருக்கையே என்றும், 40 வயதில் உனக்கு இது தேவையா? இந்த வயசுல உனக்கு அந்த ஆம்பளை கேக்குதா? என்று மோசமான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தது.
இதைப் பார்த்து கடுப்பான திவ்யா ஸ்ரீதர் நான் உடலுறவுக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னுடைய பாதுகாப்புக்கு குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாமல் ஒரு வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்றால் எங்கே கணவர் என்று கேட்பார்கள். அது போல் பிள்ளைகளுக்கு அப்பா என்று ஒரு ஆண் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் வீட்டில் யாரும் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய மாட்டார்கள்.
அந்த ஆண் ஒரு நோஞ்சானாக கூட இருந்தாலும் வீட்டில் ஒரு ஆண் இருக்கிறார் என்ற பயம் இருக்கும். இது தான் நிதர்சன உண்மை. எனவே தான் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை திவ்யா ஸ்ரீதர்.
அத்தோடு உடலுறவு வாழ்க்கையில் ஒரு அங்கம். ஆனால் அதுவே வாழ்க்கையல்ல என்பதை பலருக்கும் புரியக்கூடிய வகையில் தன் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை என்ற முடிவில் இந்த முடிவை எடுத்ததாக சொல்லி இருக்கிறார்.
எப்படி இருக்க கூடிய பட்சத்தில் சில பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்றால் அப்படியே அதை விட்டு விட்டால் அதை பலரும் முன் மாதிரியாக எடுத்து தவறான பாதையில் செல்ல வாய்ப்புகள் உள்ளது.
அப்படி யாரும் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தான் என்னுடைய விவாதம். இதில் இன்னொரு விஷயத்தை சொல்கிறேன். டிஸ்யூம் படத்தில் நடித்த கின்னஸ் பக்ரு திருமணம் செய்து கொள்ள அறிவிக்கிறார்.
இந்த திருமண அறிவிப்பு வந்த போது இவ்வளவு குள்ள பையனுக்கு இவ்வளவு பெரிய பெண்ணா? குள்ளனுக்கு எதுக்கு கல்யாணம்? இவன் கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறான் என்பது போல விமர்சனங்கள் எழுந்தது.
அத்தோடு அந்தப் பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கப் போகிறான் என்று பல்வேறு வகைகளில் பேசியதை அடுத்து கின்னஸ் பக்ரு அந்த பெண்ணிடம் சென்று திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறினார்.
அது மட்டுமல்லாமல் என்னுடைய வாழ்க்கையை எண்ணி உன் வாழ்க்கை வீணாகி விடுமோ? என்ற பயம் இருக்கிறது. எல்லோரும் அப்படி செல்கிறார்கள் என அந்த பெண்ணிடமே போய் சொன்னார்.
ஆனால் அந்தப் பெண்ணோ நான் உங்களை திருமணம் செய்து கொள்வேன். நான் உங்களுடைய உயரத்தை பார்க்கவில்லை. உங்களுடைய மனதை பார்க்கிறேன். உங்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறி திருமணம் செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த நிலையில் குடும்பத்திற்கு நல்ல கணவராகவும் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாகவும் வாழ்ந்து வருகிறார்.
அத்தோடு முன்னணி நடிகர் பலர் உதாரணத்துக்கு தல அஜித் மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் தங்கள் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை இணைய பக்கங்களில் அடிக்கடி பகிர்வார்கள்.
இதற்கு என்ன காரணம் தெரியுமா? எந்த பிரச்சனை வந்தாலும் குடும்பம் தான் முக்கியம் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் என்னதான் பணம் சம்பாதித்தாலும் பிரச்சனை என்று வந்தால் குடும்பத்தில் இருப்பவர்கள் தான் முக்கியம் என்பதை உணர்த்தத்தான்.
இந்த சூழ்நிலையில் சின்ன சின்ன பிரச்சனைக்காக விவாகரத்து பெறுவது கேவலமான ஒன்று இது வாழ்க்கையின் போக்கை மாற்றிவிடும் பெரிய ஆபத்தான ஒன்று.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயதை தொட்டு இந்தியாவிற்கே ஒரு மிகப்பெரிய ஸ்டாராக ஜொலித்தாலும் அவர் தன்னுடைய மகளுக்கு ஒரு தந்தை தன்னுடைய பேரக்கு தாத்தா.
அப்படி இருக்கும் போது மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே, பேரன் அப்பா இல்லாமல் தவிக்கிறானே என்ற வேதனை அந்த மனிதனுக்குள் கட்டாயம் இருக்கும் அல்லவா?
அவரிடம் அதிக அளவு பணம் செல்வம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மகிழ்ச்சி இருக்கிறது. பிரிந்து எதை சாதிக்க போகிறார்கள் இதைத்தான் இங்கு நான் சொல்ல வந்தேன்.
இதைத்தொடர்ந்து ஒரு வழியாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் மீண்டும் இணைகிறார்கள். தனுஷ் புதிதாக கட்டி இருக்கும் வீட்டில் தனுஷ் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா அவருடைய குழந்தைகள் குடி போக போவதாக தகவல்கள் வந்துள்ளது.
இது நல்ல படியாக நடந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இதை பார்த்து பல தம்பதிகள் தங்களுடைய விவாகரத்து முடிவை மாற்றிக்கொள்ள இதுவே உந்துதலாக அமையும் என செய்யார் பாலு கூறியிருக்கிறார்.
இதை எடுத்து இவருடைய இந்த வீடியோவும் தற்போது என்னைய பக்கங்களில் அதிக அளவு பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
Summary in English : In a recent chat, Cheyyar Balu shared her thoughts on the whole marriage and divorce scene among celebrities, and it was pretty eye-opening! She pointed out how these high-profile decisions aren’t just personal—they ripple out and affect fans in ways we might not even realize.