There’s been quite a buzz lately about the biopic “Amaran,” and it’s not just because of its gripping storyline. One of the hot topics swirling around this film is how it portrays Mukunth Varatharajan’s caste.
தீபாவளிக்கு வெளிவந்த முன்னணி நடிகரின் திரைப்படமான அமரன் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்திருந்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்த கதையானது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு பயோபிக் திரைப்படம் ஆகும்.
ஆனால் இந்த திரைப்படத்தில் திட்டமிட்டு சில உண்மைகள் மறைக்கப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களுடைய கேள்வியை தொடர்ந்து கேட்ட வண்ணம் இருப்பது இணையத்தில் தற்போது பேசும் பொருளாகி உள்ளது.
நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மூன்றே நாளில் சுமார் 100 கோடி ரூபாய் அளவு வசூலை செய்து பாக்ஸ் ஆபீஸ் கிட் படமாக மாறி உள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயனின் திரைப்பட வாழ்க்கையில் இந்த படம் ஒரு மைல் கல்லாக அமையும் என்று உறுதியாக சொல்லலாம்.
அந்த வகையில் இந்த படத்தின் மையக்கருவாக இருக்கும் மேஜர் முகுந்த் வரதராஜனுடைய பின்புலமானது திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதால் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்று மேஜர் முகுந்த் மற்றொன்று மேஜர் முகுந்தன் மனைவி. இதில் மேஜர் முகத்தின் மனைவி கிறிஸ்துவராக காட்டப்பட்டு இருக்கிறார் அதுதான் உண்மை.
அந்த வகையில் படத்திலும் சாய்பல்லவியின் கதாபாத்திரம் அவர் வீடு அவருடைய பெற்றோர்கள் மற்றும் வீட்டில் மாட்டி வைக்கப்பட்டுள்ள இயேசுவின் புகைப்படம் என அவரை ஒரு முழுமையான கிறிஸ்தவ பெண்ணாக சித்தரித்து காட்டி இருக்கிறது இந்த திரைப்படம்.
ஆனால் இதில் உண்மையான விஷயம் என்னவென்றால் மேஜர் முகுந்த் ஒரு பிராமண குடும்பத்தை சார்ந்தவர். எனினும் அவர் ஒரு பிராமணர் என்பதை வெளிப்படுத்தாமலேயே கதையை நகர்த்தி முடித்திருக்கிறார்கள்.
இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசனும் ஒரு பிராமண சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தும் ஒரு ராணுவ வீரர் அதுவும் தன் இனத்தைச் சேர்ந்தவர் என்பதை அடையாளம் காட்ட மறுத்தது ஏன்? எதனால் இது நிகழ்ந்தது.
ஹீரோ பிராமண குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதை காட்டக் கூடாது என்று எவராவது அழுத்தம் கொடுத்தார்களா? அல்லது இந்த படத்தை வெளியிட்ட ஆளும் கட்சியின் நிறுவனமான ரெட் ஜெயிண்ட நிறுவனம் ஏதாவது நிபந்தனை விதித்து அதை தடுத்ததா?
இப்படி பல கோணங்களில் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வரக்கூடிய நிலையில் இந்த படம் முழுக்க சிவகார்த்திகேயன் தன்னுடைய தந்தையை நைனா என்று அழைப்பது முற்றிலும் செயற்கை தனமாக உள்ளது.
அதுபோல படத்தில் முகுந்தின் அம்மா ஆரம்பம் முதல் ராணுவத்தில் சேர்ந்த பிறகும் கூட தன் மகன் மேல் அதிருப்தி உள்ளது போலவே காட்டி இருக்கிறார்கள். அதே நேரம் சாய்பல்லவி சிலுவையைக் கழுத்தில் அணிந்து கொண்டு கடவுளுக்கு அஞ்சக்கூடிய ஒரு பெண்ணாக காட்டப்பட்டு இருக்கிறார்.
எனினும் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மையான அடையாளம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாகவே இங்கு பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இதை எப்படி ஒரு பயோ பிக் திரைப்படம் என்று கூறுவது? ஒருவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் என்று சொல்லுவதே தவறு என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள்.
ஏற்கனவே இது போல ஜெய் பீம் படத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த வில்லன் போலீஸ் அதிகாரியை இந்து வன்னியர் மதத்தை சேர்ந்தவராக காட்டியதின் நோக்கம் என்ன? எதற்காக ஒரு பிராமணன் ஹீரோவாக இருந்தால் அவனுடைய சமுதாயத்தை மறைக்கிறார்கள்.
அதே சமயத்தில் வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் வில்லனாக இருக்கக்கூடிய பட்சத்தில் அவர்களை இந்து மதத்தை சார்ந்தவர்களாக அடையாளப்படுத்துவது ஒரு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இங்கு ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. அது தான் திராவிட இயக்கத்தை சேர்ந்த தலைவர்களில் ஒருவராக திகழும் சுப வீரபாண்டியன் தன்னுடைய twitter பக்கத்தில் எழுதி இருக்கும் பதிவு.
அதில் புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. அதில் ஒருவர் கூட பார்ப்பனர் இல்லை என்று பேசிக் கொள்கிறார்களே இது உண்மையா? அப்படி என்றால் உயிரிழந்த ராணுவ வீரர்களில் யாருமே பிராமணர்கள் இல்லை என்று பகடி செய்யும் விதமாக பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் நாடு ஒட்டுமொத்தமான துயரல் மூழ்கி இருக்கும் நேரத்தில் அங்கு இறந்தவர்கள் என்ன ஜாதி என்பதை ஆய்ந்து பார்ப்பதை விட பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை கிண்டல் செய்வதை குறிக்கோளாகக் கொண்டு பேசினாரா திராவிட இயக்க தலைவர் சுப வீரபாண்டியன்.
இதில் ஒரு பிராமண குடும்ப நாட்டுக்காக போராடி உயிர் இழந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வருகின்ற பட்சத்தில் அந்த குடும்பத்தினரின் அடையாளம் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவரது ஜாதி பற்றிய விவரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
இது போன்ற விஷயங்கள் யாருடைய தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது. இப்படி நடக்கக்கூடிய விஷயங்கள் எதேர்ச்சியாக நடக்குமா? இல்லை இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டு உள்ளதா? என்பது போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
எனவே இதற்குப் பின்னால் இருக்கக்கூடியது யார் இப்படிப்பட்ட விஷயங்களை யார் திட்டமிட்டு மறைக்கிறார்கள். அப்படி மறைத்து மடை மாற்றக்கூடிய நபர்கள் யார் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலோடு காத்திருப்பதால் இதனை விவாத பொருளாக கையில் எடுத்து சில நபர்கள் இணையம் முழுவதும் பேசி வருகிறார்கள்.
Summary in English: There’s been quite a buzz lately about the biopic “Amaran,” and it’s not just because of the gripping storyline or the stellar performances. A lot of chatter is swirling around how the film portrays Mukunth Varatharajan’s caste, sparking discussions that go beyond just entertainment.