Wednesday , 22 January 2025

விடாமுயற்சி படத்தில் இத நீங்க எதிர்பார்க்க வேண்டாம்.. இயக்குனர் மகிழ் திருமேனி சொன்ன பகீர் தகவல்..!

விடாமுயற்சி படம் குறித்து அதன் இயக்குனர் மகிழ் திருமேனி குமுதம் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தல அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருக்கும் விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் அண்மையில் வார இதழான குமுதம் பத்திரிக்கை அளித்த பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். 

அதில் விடாமுயற்சி படத்தில் கதை அஜித் சாருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் படம் பண்ணலாம் என்று கூறியதாகவும் உடனே நான் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காக இந்த கதையில் என்னென்ன செய்யலாம் என யோசிப்பதற்கு முன்பே கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள் என்று கூறினார். 

மேலும் எல்லோருக்குமான படம் எனவே எனக்காக என்னுடைய ரசிகர்களுக்காக இந்த படத்தில் நீங்கள் சொன்ன கதைகள் எதையும் கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம். 

உங்களது விருப்பம் போல படம் எப்படி வரவேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அப்படி படத்தை படப்பிடிப்புச் செய்யுங்கள் என்று முழு சுதந்திரத்தை எனக்கு கொடுத்து ஊக்கப்படுத்தினார். 

எனவே வழக்கமான அஜித் படங்களில் இருக்கக்கூடிய காட்சிகளை இந்த படத்தில் நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம் விடா முயற்சி என்ற தலைப்பை தேர்வு செய்ததும் நம்ம தல அஜித் தான். 

இதனை அடுத்து எத்தனையோ தலைப்புகள் பற்றி நாங்கள் யோசித்தோம். ஆனால் கதைக்கும் தலைப்புக்கும் ஒரு பிணைப்பு இருக்க வேண்டும் அல்லவா? அதை இந்த தலைப்பு தான் தந்தது. 

எனவேதான் இந்த கதைக்கு விடாமுயற்சி என்ற தலைப்பு மிக நெருக்கமாக ஒரு பிணைப்போடு உயிரோட்டமாகவும் இருக்கும் என்பதால் விடாமுயற்சி என்பதே தலைப்பாக வைத்து விட்டோம் எனக் கூறியிருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் அஜித் ஒரு மாஸ் நடிகர் என்பதால் அவருக்கு ஒரு மாஸ் காட்சியில் 10 பேரை தூக்கிப் போட்டு அடிப்பது, மிதிப்பது போன்ற காட்சிகளை இந்த படத்தில் நாங்கள் வைக்கவே இல்லை. 

ஏனென்றால் சாதாரண வாழ்க்கையில் ஒரு மனிதன் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வானோ அவனுடைய பார்வையில் அதை எப்படி சமாளிப்பானோ அப்படி சமாளிக்க முயற்சி செய்யக் கூடிய விதத்தைத்தான் காட்டி இருக்கிறோம். 

எனவே இந்த படத்தை பொறுத்தவரை இது படத்தின் கதையாக இருக்குமே தவிர ஒரு மாஸ் ஹீரோவின் தன்மையோ அல்லது ஒரு மாஸ் ஹீரோ ஒரு பிரச்சனையை அணுகுவது போல அமைந்து இருக்காது.

எனவே மிகவும் சாதாரணமான ஜனரஜகமான ஒரு திரைப்படமாக இந்தப் படம் இருக்கும் என்று சொன்னால் அது மிகை ஆகாது. 

Summary in English: Director Magizh Thirumni recently shared some insights about his film “Vidaamuyarchi,” and it’s definitely worth a chat! He emphasized that this movie is not just another flick; it’s a deep dive into human emotions and the complexities of relationships. Magizh mentioned how he wanted to create a narrative that resonates with everyone, making you laugh, cry, and think all at once.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.