Wednesday , 22 January 2025
vijay sppech

ஜெட் வேகத்தில் வளரும் தவெக..! கிறிஸ்மஸ் அன்று வரவிருக்கும் பெரிய சர்ப்ரைஸ்..!

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிறிஸ்மஸ் அன்று வெளிவரலாம் என்ற தகவல் இணையத்தில் வெளியானது.

தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பத்தவுடன் அரசல் புறசலாக அவர்கள் எல்லாம் இது செட்டாகுமா? என்ற கேள்விகள்  ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவருடைய கூச்ச சுவாபத்துக்கு அரசியல் செட் ஆகுமா? என்று விதவிதமாக பேசினார்கள். 

இதை அடுத்து  தளபதி விஜய் நடந்தி முடிந்த முதல் மாநாட்டில் சரவெடியாய் வெடித்து அனல் கக்கிய பேச்சை வெளிப்படுத்தி அனைவரையும் திணறவிட்டார்.

இதை எடுத்து தமிழக மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றம், ஒரு புதிய அரசியல் களத்தில், புதிய அரசியல் தலைமையில் நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் விஜயின் நகர்வுகள் அமைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. 

மேலும் இவருடைய அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? அடுத்தடுத்து அரசியல் நிகழ்வுகளில் இவரால் சாதிக்க முடியுமா? சோபிப்பாரா? என்ற கேள்விகளுக்கு விடை தரக்கூடிய வகையில் முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்க இருக்கிறார் தளபதி விஜய். 

vijay with sword

அந்த வகையில் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த பிறகு பல்வேறு கட்சிகள் இவருடைய வளர்ச்சியை பார்த்து பொறாமையும் அதிருப்தியும் கொண்டுள்ளார்கள். 

மேலும் இவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்து விமர்சனங்கள் வெளிவர ஆரம்பித்து விட்டதை அடுத்து அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. 

தளபதி விஜயின் கட்சியில் தனிப்பட்ட சித்தாந்தம், அரசியல் கொள்கைகள் மாறுபட்டு இருக்கிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் இந்த சித்தாந்தம், அரசியல் கொள்கைகள் என எதையும் எந்த கட்சிகளும் பின்பற்றாதது போல இவரும் இருப்பாரா? 

இந்நிலையில் எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்கும் சமயத்தில் அரசியல் களம் எப்படி இருக்கும். இவர் எந்த கட்சியுடன் சேர்ந்தால் எத்தனை சீட்டுகளுக்கு கிடைக்கும்? இதனால் எந்த கட்சிக்கு லாபம்? அரசியலில் இவர் கையாள கூடிய யுக்தி என்ன? என்று பலரும் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள். 

இதற்கு காரணம் தன்னுடைய முதல் மாநாட்டிலேயே கூட்டணிக்கான அச்சாரத்தை உடைத்து இருக்கும் விஜய் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் வயிற்றில் புளியை கரைத்து விட்டார். 

vijay talk

இது ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வரக்கூடிய அவர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரக்கூடியது கிறிஸ்துமஸ் அன்று என்று தெரிய வந்துள்ளது. 

இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் சில நாட்களில் இணையத்தை வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சூழ்நிலையில் இந்த விஷயமானது தற்போது கசிந்து வைரலாகி வருகிறது. 

மேலும் ஏற்கனவே நடிகர் விஜய் மீது கிறிஸ்தவ மிஷனரி கைக்கூலி, மிஷனரிகளின் பணத்தை வைத்து அரசியல் செய்கிறார் என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. 

எனவேதான் விஜய்க்கு அரசியல் செய்ய பணம் கொடுப்பது கிறிஸ்தவ மிஷனரிகள் என்ற ஒரு பேச்சு இணையங்களில் பரவி வருகிறது. 

அதற்கு ஏற்றது போல் கிறிஸ்மஸ் அன்று தன்னுடைய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டால் அதில் அவருக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக பலர் சொல்லி இருக்கிறார்கள். 

இருந்தாலும் நடிகர் விஜய் பிறப்பால் ஒரு கிறிஸ்தவர் என்பதால் எந்த விஷயத்தை சமாளிப்பாரா? அல்லது இவரது அரசியல் வாழ்க்கைக்கு இது தேவைதானா ?என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என பொது வழியில் பேச்சுக்கள் அடிபடுகிறது. 

இந்நிலையில் விஜயின் கட்சியில் சேர பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் நூற்றுக்கணக்காக வந்து இணைவது அனைவரையும் அதிர விட்டுள்ளது. 

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அடிப்படை பொறுப்பை விடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதை அடுத்து அரசியல் களத்தில் நடிகர் விஜய் ஒரு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தி இருப்பதோடு நாளுக்கு நாள் அவரது கட்சி வலுப்பெற்று வருகிறது என்பது நிரூபணம் ஆகிவிட்டது என அண்மை பேட்டியில் பேசியிருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.

Summary in English : The excitement surrounding actor Vijay’s upcoming film, Thalapathy 69, is reaching a fever pitch as rumors swirl that the highly anticipated first look poster will be unveiled on Christmas 2024. This news has fans buzzing with anticipation, and for good reason. 

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.