Wednesday , 22 January 2025

இந்தியன் 2 கூட ஓகே..  லாஜிக், பிசிக்ஸ் எல்லாமே காணாம போச்சு.. கேம் சேஞ்சர் விமர்சனம்..!

இன்று திரையரங்குகளில் பெரிய அளவு எதிர்பார்ப்பில் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக விளங்கிய கேம் சேஞ்சர் திரைப்படம் வெளிவந்துள்ளது அந்த படத்தின் விமர்சனம் குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பிரம்மாண்ட இயக்குனர்கள், முன்னணி ஹீரோக்களின் படங்கள் அதிகமாக தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் தான் லாஜிக் இல்லாத மேஜிக்கை ரசிகர்கள் ஒர்க் அவுட் ஆகும் என்று சொல்லுவார்கள்.

அந்த வகையில் அவர்களை யூக படுத்திக் கொண்ட பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கிராவிட்டி என எதையும் தங்களுடைய பட காட்சிகளில் பொருத்திப் பார்ப்பது கிடையாது. 

இந்த சூழ்நிலையில் இருக்கும் போது கேம் சேஞ்சர் படத்தில் இடம் பிடித்துள்ள ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி தொடர்ந்து பரவி வருவதை அடுத்து இந்த காட்சி குறித்து பலரும் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். 

இதில் ஒரு நாள் முதல்வர், லஞ்சம் வாங்கினால் கொலை செய்யும் தாத்தா, அம்பியாக இருந்து அந்நியனாக மாறியது, அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை ஆட்டை போட்டு மக்களுக்கு பயன்படுத்துவது, இப்படி ஒவ்வொரு படத்திலும் அரசியல் குறித்து அதிகளவு சவாலான திரைக்கதையை மாற்றி தன் ஸ்டெயிலில் பொதுமக்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர். ‌

இவரின் பிரமாண்ட இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கேம் சேஞ்ச திரைப்படம் அரசியலை மையமாகக் கொண்டுதான் வெளிவந்துள்ளது. ஒரு படம் வெளியான உடனே அந்த படம் பற்றிய நெகட்டிவ் கருத்துக்களை பரப்ப வேண்டும் என ஒரு கூட்டமே தயாராக உள்ளது. 

அந்தக் கூட்டம் இந்த படத்தை விட்டு விடுமா என்ன இந்த படத்தில் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களும் இணைந்ததை அடுத்து இணையம் எங்கும் போர் நடக்கிறதா? என்று கேட்கக் கூடிய அளவு போர்க்களமாகவே மாறிவிட்டது. 

எப்படி விஜய் அஜித் ரசிகர்கள் சண்டை நடைபெறுகிறதோ? அதுபோல தெலுங்கில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்களின் மத்தியில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே கடந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததை அடுத்து இந்த படத்தின் மூலம் கம்பாக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

மேலும் ராம் சரண் ரசிகர்கள் நிச்சயம் இந்த படம் கம் பேக் படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இதற்கு இந்தியன் 2 படமே பெட்டர் எனவும் ஆரம்பக் காட்சிகளில் லாஜிக்கு பெருமளவு ஓட்டை விழுந்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். 

மேலும் லாஜிக் என்றால் எத்தனை கிலோ அது எங்கு விற்கும் என்று கேட்பது போல ஒரு காட்சியை அறிமுகப்படுத்தி இருக்கக்கூடிய இயக்குனர் சங்கர் பற்றி கருத்துக்கள் பெருமளவு பரவி வருகிறது. 

அதுமட்டுமல்லாமல் ரயில் தண்டவாளத்தை கட்டி போட்டிருக்கும் ஆட்களை ஹெலிகாப்டரில் வரும் ராம்சரண் அப்படியே தன்னுடைய நீண்ட வாழ் கொண்டு அந்த கயிறுகளை அறுக்கிறார். 

இதை அடுத்து அந்த தண்டவாளத்தில் இருந்து அடுத்த நொடியே அவர்கள் எஸ்கேப் ஆகிறார்கள். ரயில் அவர்களை நசுக்க ஒரு வினாடி மட்டுமே இருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடக்கிறது இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் கடுமையாக கலாய்த்து இருக்கிறார்கள். 

Summary in English: Fans have been buzzing about Director Shankar’s latest flick, Game Changer, and let’s just say not all the chatter is filled with praise. While some viewers are raving about the visuals and action sequences, others are scratching their heads over some glaring logic holes that seem to pop up throughout the film.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.