Wednesday , 22 January 2025

தமிழ் சினிமா இதனால தான் நாசமா போயிருச்சு.  கௌதம் வாசுதேவ் மேனன் ஓபன் டாக்..! 

சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் அவர்களின் அணுகுமுறை குறித்து தனது வேதனையை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பதிவு செய்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் சினிமாவை பொருத்தவரை முன்னணி நடிகர்கள் அவர்களுக்குள் ஒரு வரையறையை வகுத்துக் கொண்டு நடித்து வருவதோடு அவர்கள் தேர்ந்தெடுக்கின்ற கதைகளை மட்டுமே மையமாகக் கொண்டு நடிப்பதை வழக்க படுத்திக் கொண்டார்கள். 

இதனால் புதிய கதைகள் மற்றும் களங்கள் தமிழ் சினிமாவில் உருவாவது தடுக்கப்படுவதோடு தமிழ் சினிமாவின் வளர்ச்சி முற்றிலும் தடைபடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டதாக குற்றச்சாட்டு ஒன்றினை பதிவு செய்திருக்கிறார். 

அவர் பேட்டி ஒன்றில் பேசும் போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறிப்பிட்ட வட்டம் அல்லது அவர்களுக்குள் ஒரு வரையறையை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பொருந்தும் கதைகளை மட்டுமே செய்து நடிக்கிறார்கள். 

இதனால் இயக்குனர்களின் புதிய கதைகளை சொல்லும்போதும் அதை ஏற்று நடிக்க கூடிய மனப்பக்குவம் இல்லாமல் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த நடிகர்களின் வரைமுறையை தாண்டி கதை சொல்லும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. 

எனவே தான் புதிய கதைக்களத்தை அமைக்க முடியாமல் இயக்குனர்கள் நடிகர்களின் வரையறைக்குள் கதைகளை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

பொதுவாக டாப் ஹீரோக்கள் அனைவரும் இந்த வரையறையை தங்களது பாதுகாப்பு வளையமாக நினைத்துக் கொள்வதால் தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த வளர்ச்சியும் தடைபட்டு விட்டது. 

எனவே இதை உணர்ந்து புதிய கதைகள் புதிய களங்கள் தமிழ் சினிமாவில் வரவேண்டும் என்றால் இந்த கட்டுப்பாட்டை தாண்டுவது மிகவும் முக்கியம். கதைகளுக்கு பஞ்சமில்லை என்றாலும் நடிகைகள் இதனால் நமக்கு என்ன கிடைக்கும் போகிறது என்று நடிக்க மறுக்கிறார்கள். 

ஒரு மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் முன் சித்தரிக்கப்பட்ட நடிகர்கள் ராஜாவாக ஒரு படத்தில் நடிக்கிறார் மற்றொரு படத்தில் சாதாரண கூலியாக வேலை செய்வது டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்ய நடிக்க தயங்குவது பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். 

மேலும் கதாநாயகனுக்கு உண்டான சில பொதுவான விஷயங்கள் ஹீரோயிசம் என்ற பெயரில் 10 பேரை தூக்கிப் போட்டு அடிப்பது படம் முழுவதும் மாஸ் காட்டுவது காமெடி நடிகர்கள் ஹீரோவின் புகழை பாடுவது போன்றவை கதையில் இருந்தால்தான் கமர்சியலாக ஒர்க்அவுட் ஆகும் என்று நம்புகிறார்கள். 

இப்படி இருந்தால் புதிய கதைகள் எங்கிருந்து வரும் எனவே நடிகர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய வகையில் செயல்படுவது அவசியம். புதிய கதைகளுக்கும் களத்திற்கும் முன்னுரிமை கொடுக்க தயாராக கூடிய மனநிலை ஏற்பட வேண்டும். 

இப்படி இயக்குனர் கௌதம் மேனன் பேசியிருக்கும் பேசியானது தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை எடுக்கக்கூடிய நடிகர்களின் மனப்பான்மையை வெளிப்படுத்தியதோடு அவரது வேதனையையும் பகிர்ந்திருக்கிறார். 

மேலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் ஒரு சாதாரண தமிழ் சினிமா ரசிகனாக தான் இதை கூறுகிறேன் என்று தனது மனவேதனையை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியதை அடுத்து தமிழ் சினிமாவில் மாற்றம் ஏற்படுமா? என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியவரும். 

என்னைத் தொடர்ந்து கௌதம் மேனனின் இந்த கருத்துக்கள் சினிமா வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பிவிட்டிருப்பது சிலர் அவரது கருத்தை ஆதரித்து பேசி வருவது இனிய பக்கங்களில் பார்க்க முடிகிறது. 

Summary in English: Gautam Vasudev Menon recently shared his thoughts on the state of Tamil cinema, and let’s just say, he didn’t hold back! He pointed out that the attitude of some Tamil heroes seems to be stuck in a small circle, which he believes is holding the industry back from truly growing. It’s like they’re playing it safe instead of taking risks that could elevate not just their careers but also the entire film scene.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.