அமரன் திரைப்படம் திரையுலகில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜன் அறியாத பக்கம் குறித்து அவரது மனைவி பேசி இருக்கும் விஷயங்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த திரைப்படமான அமரன் திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் 200 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணமே பயோபிக் கதை அம்சத்தில் மேஜர் முகுந்த் வரதராஜ் மற்றும் அவர் நாட்டுக்காக செய்த தியாகம் பற்றி தான் கதை கரு அமைந்திருந்ததை அடுத்து படம் வெற்றியை பெற்றுள்ளது.
முகுந்த் செய்த தவறு..
பயோபிக் திரைப்படம் என்பதால் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு மிக சிறப்பான முறையில் காட்டப்பட்டு இருந்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.
அடுத்து மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மையான மனைவி இந்து ரெபேக்கா பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டிகளை கொடுத்த வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டதை அடுத்து முகுந்த் வரதராஜ் பற்றி பலருக்கும் தெரியாத ரகசியமான மற்றொரு முகத்தைப் பற்றி வெளிப்படையாக பேசி அனைவரையும் அதிரவிட்டார்.
அதில் அவர் கூறிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் அவர் பேசும் போது நாட்டுக்காக போரில் பங்கேற்க சென்று விட்டார். ஆனால் நான் அவருக்காக என்னுடைய வீட்டில் போரிட வேண்டியிருந்தது.
உங்களுக்குத் தெரியாத முகுந்தின் மற்றொரு பக்கம்..
எனக்கு இரண்டு அண்ணன்கள் இருவருமே என்னை விட வயதில் மூத்தவர்கள் இன்னும் சொல்லப்போனால் எனக்கு மூன்று அப்பாக்கள் இருந்தார்கள் என்று தான் அவர்களை சேர்த்து சொல்ல வேண்டும்.
என்னுடைய இந்த மூன்று அப்பாவையும் நான் சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மூவரையும் என் காதலுக்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது.
இங்கு முகுந்த் செய்த தவறு என்னவென்றால் மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் எங்களுடைய நாட்கள் மிகவும் மெதுவாக நகர்ந்தது.
நாட்கள் மட்டும் தான் அப்படி மெதுவாக சென்றது என்றாலும் எங்களுடைய காதல் படு வேகமாகவும், வலுவாகவும் எங்களுக்குள் வளர்ந்தது.
அதுமட்டுமல்லாமல் முகுந்த் செய்த தவறு என்ன என்று சொன்னால் முதன் முறையாக என்னுடைய பெற்றோரிடம் அவர் பேசும் போது ஒரு விவரம் இல்லாத முறையில் பேசினார்.
ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் என் பெற்றோரிடம் அவர் பேசும் போது ஆளே மாறி இருந்தார். அவருடைய பேச்சு, அவருடைய வேலை அவர் குறித்து அனைத்தையும் என் பெற்றோர்கள் தெரிந்து கொண்டதால் தான் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.
ரியல் இந்து ரெபேக்கா உடைத்த உண்மை..
இதற்குக் காரணம் என்னுடைய உறவினர் ஒருவர் கடற்கரையில் இருந்தார். அவருக்கு முகுந்த் பற்றி மிக நன்றாக தெரிந்திருந்தது. அவரும் முகுந்த் பற்றி என்னுடைய வீட்டில் நல்லபடியாக எல்லாவற்றையும் கூறினார்.
இந்த விஷயம் தான் எங்களுடைய காதல் வெற்றி பெற உதவியாக இருந்தது என்று பேசி இருக்கிறார். இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
Summary in English : Indhu Rebecca, the wife of Major Mukunth Varatharajan, recently shared some heartfelt insights into her husband that many might not know. While most people see him as the brave major serving our country, Indhu reveals a softer side that showcases his humor and warmth. She talks about how he has this uncanny ability to lighten up any room with his jokes, often making even the toughest days feel a bit brighter.