தேசிய விருது பெற்ற நடிகை நித்யாமேனன் அண்மையில் செய்து செயலால் ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகிறார்கள். அது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் கூட்டணியில் உருவாக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படத்தை தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கி இருக்கிறார்.
இதை அடுத்து இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ள நிலையில் படத்தின் டிரைலர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
மேலும் படத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்ததை அடுத்து கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவர்கள் மகன் இன்பன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷினை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நடிகையை நித்யா மேனனின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி பலரது முகத்தையும் கூச வைத்துள்ளது.
மேலும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்ததை அடுத்து அந்த வீடியோ காட்சிகளை விட இந்த வீடியோ காட்சிகள் அதிகளவு பரவியது பலரையும் பேச வைத்தது.
அத்தோடு மேடையில் பேச வந்த நித்யா மேனனிடம் உதவியாளர் கை கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் உடம்பு சரியில்ல உங்களுக்கு கோவிட் ஏதாவது வந்துரும் என்று ஏதோ ஒரு காரணத்தை கூறி தவிர்த்து விட்டு வணக்கம் சொல்லி செல்கிறார்.
சில நிமிடங்களுக்கு முன்பு இவராகவே சென்று இயக்குனரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கை கொடுக்குகிறார். இதை பார்த்த ரசிகர்கள் உதவியாளருடன் கை குலுக்கினால் நோய் தொற்று ஏற்படும்.
ஆனால் இயக்குனர்களோடு கை கொடுப்பதால் அந்த நோய் தொற்று ஏற்படாதா? என்ற கருத்துக்களை பதிவிட்டு இருப்பதோடு கேள்விகளை சரமாரியாக கேட்டிருக்கிறார்கள்.
இதற்கு உரிய விளக்கத்தை நடிகை நித்யா மேனன் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.
Summary in English: At the recent release event for “Kadhalikka Neramillai,” things took an unexpected turn when actress Nithya Menon sparked quite a buzz online. Picture this: the venue is buzzing with excitement, fans are cheering, and everything seems to be going smoothly. But then, in a moment that caught everyone off guard, Nithya refused to shake hands with one of the helpers at the event.