ஜெயம் ரவி விவாகரத்து கோரி விண்ணப்பித்திறந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜெயம் ரவியிடம் தனது மனைவி ஆர்த்தி உடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.
திரை உலகில் வலம் வரும் நட்சத்திர தம்பதிகள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மிகவும் பிரபலமாக ரசிகர்களின் மத்தியில் பேசப்படக்கூடிய இவர்களது வாழ்க்கையில் தற்போது விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தமிழ் முன்னணி நடிகர் தனுஷ் விவகாரம் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை அடுத்து அண்மையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடிகள் விவாகரத்து செய்தார்கள்.
விவாகரத்து கேட்ட ஜெயம் ரவி..
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு இடியாய் வந்து சேர்ந்தது ஜெயம் ரவியின் விவாகரத்து விஷயம் தான். ஆனால் இவர்களது விவாகரத்தில் அவரது மனைவி ஜெயம் ரவியின் விவாகரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அது மட்டுமல்லாமல் ஜெயம் ரவியோடு இணைந்து வாழவே விருப்பப்படுகிறேன் என்று கூறியதை அடுத்து இணையம் முழுவதும் இந்த விவகாரம் பேசும் பொருள் ஆனது.
மேலும் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக இணைய பக்கத்தில் பதிவு செய்ததை அடுத்து மறுநாள் தன்னுடைய மறுப்பு அறிவிப்பை அவரது மனைவி வெளியிட்டு இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.
இந்நிலையில் ஜெயம் ரவி தரப்பில் ஆர்த்தியை சந்திப்பதற்கு தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் வீட்டில் மிகவும் மோசமான முறையில் நடத்தப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் மனைவியுடன் கலந்து ஆலோசியுங்கள், சமரச பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்தால் நல்லது என பலரும் சொன்ன விஷயத்தை அடுத்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பயனில்லை.
அதிரடியை உத்தரவு பிறப்பித்த நீதிபதி..
இந்நிலையில் உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவியை விவாகரத்து செய்ய குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்க வந்த போது நீதிபதி ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தரப்பு வாதத்தை ஏற்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜெயம் ரவிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அடுத்து வழக்கின் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
Summary in English : In a surprising turn of events, family court officials have asked actor Jayam Ravi to consider attending counseling sessions with his wife before they take the next steps in their divorce petition. It seems like they’re really pushing for a chance to sort things out and maybe even find some common ground.