அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பட்ஜெட் மற்றும் படப்பிடிப்பின் போது நடந்த சில சுவாரசிய சம்பவங்களை விளக்கி இருக்கிறார் அது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த நானும் ரௌடி தான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை உருவாக்கும் போது சில பிரச்சனைகள் நடந்ததாக சொல்லி வலைப்பேச்சு பிஸ்மி அண்மை பேட்டி ஒன்று சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அந்த வகையில் நான்கு கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதுதான் இந்த திரைப்படம்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் அரும்பியதை அடுத்து இந்த படத்தின் பட்ஜெட் 17.5 கோடி ரூபாயாக உயர்ந்ததாக ஓப்பனாக பேசியிருக்கிறார்.
மேலும் நயன்தாராவை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் விக்னேஷ் சிவன் காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுத்ததாகவும் இதனால் படப்பிடிப்பு நாட்கள் நீடித்ததோடு மட்டுமல்லாமல் பட்ஜெட்டும் அதிகரித்ததாகவும் சொல்லப்பட்டது.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நடந்து கொண்ட விஷயங்கள் அசிங்கங்கள் குறித்து புகார்கள் தனுசுக்கு சென்றதாகவும் பிஸ்மி குண்டை தூக்கி போடக்கூடிய அளவு பேசி இருக்கிறார்.
அத்தோடு படத்தின் பட்ஜெட் நான்கு மடங்கு ஏறியதால் கடுப்பாகிப்போன தனுஷ் படத்தை கைவிட முடிவு செய்ததாகவும் பின்னர் விக்னேஷ் சிவன் மற்றும் நயந்தாரா இருவரும் சொந்த பணத்தை போட்டு படத்தை முடித்ததாகவும் பிஸ்மி கூறி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ராதிகா கூட பேசிக்கொண்டே தனுஷ் இடம் தான் பேசும் போது விக்னேஸ்வனும் நயன்தாராவும் காதலிக்கிறார்கள் என்பதை கூறியதாக சொன்னது குறிப்பிடத்தக்கதாகும்.
பிஸ்மியின் இந்த கருத்துக்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு விக்னேஷ் சிவன், நயந்தாரா அல்லது தனுஷ் சார்பில் இருந்து எந்த விட அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் பிஸ்மிக்குரிய இந்த தகவல்களில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது தெரியாத நிலையில் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்தால் மட்டும்தான் உண்மை நிலை தெரிய வரும்.
அத்தோடு படத்தின் பட்ஜெட் மற்றும் படப்பிடிப்பு குறித்து பிஸ்மி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு பதில் அளித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று எல்லோரும் அந்த பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.
Summary in English: In a recent open talk, journalist Bismi spilled the beans on the film “Naanum Rowdy Dhaan,” diving into its budget and the real-life romance between director Vignesh Shivan and actress Nayanthara. The film, which has become a fan favorite, was made on a pretty tight budget but managed to pull off some impressive visuals and storytelling. Bismi highlighted how Vignesh’s creative vision really shone through despite the financial constraints.