அமரன் திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா சொல்லும் போது கடைசி பத்து நிமிட காட்சியில் என்னுடைய இதயத்தையும் மூச்சையும் நிறுத்திவிட்டார்கள். அதை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது.
தீபாவளி என்று திரைக்கு வெளிவந்த திரைப்படங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்படும் திரைப்படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் திரை உலக பிரபலங்களும் இந்த திரைப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.
அவர்கள் வெறும் பாராட்டோடு நின்று விடாமல் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் திரை உலகின் பிரபல நடிகையாக திகழ்ந்த நடிகை ஜோதிகா இந்த படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அந்தப் 10 நிமிடம்.. என் மூச்சையே நிறுத்திட்டா..
அமரன் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஒரு மிகப்பெரிய வைரத்தை உருவாக்கி இருக்கிறார்.
ஜெய் பீம் படத்திற்கு பிறகு ஒரு கிளாசிக் தமிழ் படமாக இந்த திரைப்படம் வெளி வந்துள்ளது. சிவகார்த்திகேயன் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று அர்ப்பணிப்புடன் மெனக்கெட்டு நடிப்பார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
அது மட்டுமா? சாய் பல்லவி எப்படிப்பட்ட நடிகை என்பதை கடைசி பத்து நிமிட காட்சியில் நடித்த போது அதை பார்த்து என்னுடைய இதயம், மூச்சு அப்படியே நின்று போனதை நான் உணர்ந்தேன். உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது.
கதறி அழுத ஜோதிகா..
மேலும் ரெபெக்கா வர்கீஸ் அவருடைய தியாகத்திற்கும் உங்களுடைய நேர்மைக்கும் தலை வணங்குகிறோம். அத்தோடு உங்கள் கணவரின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த படத்தைப் பார்த்து மேஜர் முகுந்த் வரதராஜை கொண்டாடுங்கள். அத்தோடு நம்முடைய குழந்தைகளையும் எப்படி மரியாதைக்கு உரியவர்களாக வளர்க்க வேண்டும் என்பதை இதைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே இந்த வைரத்தை மிஸ் செய்து விடாதீர்கள் ரசிகர்களே.. என்று தன்னுடைய கருத்துக்களை மிக நேர்த்தியான முறையில் பதிவிட்டு அனைவரது கவனத்தையும் எடுத்து இருக்கிறார்.
இதுவரை தன்னுடைய கணவரின் திரைப்படங்கள் குறித்து ஜோதிகா இந்த அளவுக்கு பேசாத நிலையில் இப்படிப்பட்ட தமிழ் படத்துக்கு பாராட்டுகளை தெரிவித்து பதிவு செய்திருக்கும் இந்த விஷயத்தை எக்கச்சக்கமான லைக்குகள் குவிந்து வருகிறது.
Summary in English : Jyothika, the acclaimed Indian actress known for her impactful performances, recently opened up about her excitement for the much-anticipated film “Amaran.” In a casual chat, she shared some behind-the-scenes glimpses and what drew her to this project. Jyothika mentioned how the script resonated with her on a personal level, touching on themes of resilience and empowerment that are sure to strike a chord with audiences.