தமிழ் திரை உலகில் சிறந்த இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் அண்மையில் நடிகை லட்சுமி குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அது பற்றி இந்த பதிவு படிக்க தெரிந்து கொள்ளலாம்.
சமீப காலத்தில் அவள் விகடன் விருதுகள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்தது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலைநாயகி என்ற விருதினை நடிகை லட்சுமிக்கு வழங்கிய கௌரவம் செய்தார்கள்.
அப்போது விருது வழங்கும் மேடையில் நடிகை லட்சுமி அவர்களுக்கு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடிகை தேவயானி, நடிகை வெண்ணிறாடை நிர்மலா, நடிகை திவ்யா துரைசாமி உள்ளிட்டோ சேர்ந்து இயந்த விருதினை வழங்கினார்கள்.
இதை அடுத்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடிகை லட்சுமி குறித்து பேச ஆரம்பித்தபோது நடிகை லட்சுமிக்கு இன்னும் என் மேல் கோபம் போகவில்லை என்று பீடிகை போட்டார்.
“நடிகை லட்சுமிக்கு என் மேல இன்னும் கோபம் போகல..”
இவர் இப்படி பேசிய பேச்சைக் கேட்டு உறைந்து போன ரசிகர்கள் நடிகை லட்சுமிக்கும் கே எஸ் ரவிக்குமாருக்கும் என்ன நடந்தது, ஏன் இந்த கோபம் என்று ஆர்வத்தோடு அவரது பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்கள்.
அது என்ன விஷயம் என்றால் நாட்டாமை திரைப்படத்தில் குஷ்பூ நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை லட்சுமி தான் அவருடைய கால்ஷீட் வாங்குவதற்கு சென்று கொண்டிருந்தேன்.
அப்போது வழியில் ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றேன். அங்கு தான் நடிகை குஷ்பூ நடித்த படப்பிடிப்பு ஒன்று நடைபெற்று வந்தது. அப்போது என்னை பார்த்து அவர் என்னிடம் பேசினார்.
இதை அடுத்து என்ன விஷயம் அடுத்து என்ன படம் பண்ண போகிறீர்கள் என்றெல்லாம் கேட்ட சமயத்தில் நான் நாட்டாமை என்ற பாடம் செய்யப் போகிறேன். அதில் நடிகை லட்சுமி நடிக்க வைக்க அவரிடம் கால்ஷீட் வாங்க தான் சென்று கொண்டிருக்கிறேன் என கூறினேன்.
அப்போது அவர் நடிகை லட்சுமி நடிக்க கூடிய அளவு பெரிய கேரக்டரா? அது என்று என்னிடம் கேட்க ஆம் என்று நான் கூறினேன். அப்படி என்றால் அதை நான் ஏன் செய்யக்கூடாது என்று குஷ்பு என்னிடம் கேட்டார்.
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பரபரப்பு பேச்சு..
இதற்கு நான் என்ன சொல்வது என்று புரியவில்லை தயாரிப்பாளரிடம் கலந்து யோசித்தேன் அவரும் குஷ்பூ சரியாக இருக்கும் மார்க்கெட்ல இருக்கிற பொண்ணு யார் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து குஷ்பு விடவும் இந்த விஷயத்தை கூறி இதில் வயதான பெண் கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும், இளமையான பெண் கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்று சொன்னேன்.
அத்தோடு நடிகை லட்சுமி என்றால் இது சரியாக பொருந்தும் உங்களுக்கு பொருந்துமா? என்று தெரியவில்லை என சந்தேகம் எழுப்பினேன்.
அதற்கு நடிகை குஷ்பு இல்லை நான் வெள்ளை முடியோடு வயதான தோற்றத்தில் சில படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு பிரச்சனை இல்லை கண்டிப்பாக நடிப்பேன் என்று சொன்னார்.
இதனைத் தொடர்ந்துதான் அவரை நாட்டாமை படத்தில் புக் செய்தேன். இது பற்றி லட்சுமி இடம் நான் இது வரை சொன்னது கிடையாது சமீபத்திய பேட்டியில் இதை நான் உளறி விட்டேன்.
இதனைக் கேட்டதிலிருந்து லட்சுமி என் மீது கோபத்தில் இருக்கிறார் என்று பேசினார். இந்த பேச்சைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
அட இப்படி எல்லாம் நடந்திருக்குமா என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
Summary in English: Did you know that director K.S. Ravikumar originally had actor Lakshmi in mind for the iconic role in the blockbuster hit movie “Naattamai”? It’s pretty interesting to think about how different things could have been! Lakshmi was the first choice, but as fate would have it, actress Kushbu eventually landed the role and completely made it her own.