Sunday , 2 February 2025

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

உலகநாயகன் கமலஹாசன் அமெரிக்காவில் ஏஐ தொழில் நுட்பத்தை படித்துவிட்டு சென்னை திரும்பியதை அடுத்து அவரது தக் லைஃப் படம் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகும் என்ற பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்த விரிவான கட்டுரையை பார்க்கலாம். 

தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் கமலஹாசன் அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பத்தை படிப்பதற்காக ஆர்வம் கொண்டு அங்கு சென்று அந்த படிப்பை படித்திருக்கிறார்.

 ஏஐ தொழில்நுட்பத்தை படித்ததோடு நின்று விடாமல் அன்பறிவு இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளிலும் ஈடுபட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

இதன் மூலம் இவர் தனது நடிப்பு மற்றும் திரைக்கதை திறமைகளை மேம்படுத்துவதில் எந்த வயதிலும் முனைப்போடு இருக்கிறார் என்பதை சொல்லலாம். 

அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பத்தை படித்த பிறகு புதிய ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்து கமலஹாசன் இன்று காலை சென்னை திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் தக் லைஃப் படம் ஜூன் 5-ஆம் தேதி வெளிவரும் என்பதை தெரிவித்தார். விக்ரம் 2 படம் வருமா? என்று பத்திரிகையாளர் கேள்வி கேட்டதற்கு இல்லை.. இல்லை.. வேற ஸ்கிரிப்ட் எழுதிட்டு வந்திருக்கேன் என்று பளிச்சென்று கூறிவிட்டார். 

இதன் மூலம் விக்ரம் 2 படத்திற்கு பதிலாக புதிய கதைகள் அவர் ஆர்வம் காட்டியிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

 கமலஹாசனின் இந்த பேச்சானது ரசிகர்களை ஆர்வப்படுத்தி இருப்பதோடு ஏழைத் தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Summary in English: Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation. Known for his passion for innovation and creativity, Kamal is always on the lookout for ways to blend technology with art.

Check Also

போடுடா வெடிய.. செம ஃபார்மில் அனிருத்.. அடுத்த பெரிய ஹீரோவுக்கு இவர் இசைதான்..!

Exciting news for all the Chiranjeevi fans out there! The legendary actor is set to star in a new movie, and guess what? Anirudh Ravichander, the talented music composer known for his catchy tunes and vibrant soundtracks, will be composing the music

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *