It’s a sad day for the Kannada film industry as we’ve just learned about the untimely passing of director Guruprasad. His unique storytelling and ability to connect with audiences made him a beloved figure in cinema.
திரையுலகில் பல்வேறு இயக்குனர்கள் தங்களது கைவண்ணத்தை திரையில் காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வரிசையில் கன்னட திரைப்பட இயக்குனரான இயக்குனர் குரு பிரசாத் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம்.
இவர் தனது அபார திறமையை திரைப்படங்களில் காட்டியதை அடுத்து இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரும் புகழும் உள்ளதோடு அதிகளவு ரசிகர் வட்டாரமும் உள்ளது.
மாநில விருது வாங்கிய இயக்குனர் சடலம் மீட்பு..
இந்நிலையில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி இருக்கக்கூடிய இயக்குனர் குரு பிரசாத் அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் விஷயம் தற்போது இணையம் முழுவதும் பேசும் பொருளாகி உள்ளது.
மேலும் இவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து மிகப்பெரிய அதிர்வலைகளை நம் மாநிலத்தில் ஏற்படுத்தி விட்டது என்று சொன்னால் மிகையாகாது.
இவர் இறந்து போய் இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
அதுவும் பிளாஸ்டிக் கவரில் சுற்றிய நிலையில்..
இவர் வீட்டின் உள்ளே தாள் போடப்பட்டிருந்த காரணத்தால் கதவை உடைத்துக் கொண்டு தான் போலீசார் உள்ளே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் இவரது அழுகிய உடல் சடலமாக தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
இந்நிலையில் அண்மைக்காலமாக இவர் தயாரிப்பில் வெளியான படங்கள் சரியான வரவைப்பை மக்கள் மத்தியில் பெறாததை அடுத்து ஒரு மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி இருக்கிறார்.
அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வந்த இயக்குனர் குரு பிரசாத் இதனால் தவறான முடிவை எடுத்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
வெளிவந்த பரபரப்பு வீடியோ..
இந்த கன்னட திரைப்பட இயக்குனர் குரு பிரசாத் 2006 ஆம் ஆண்டு வெளி வந்த மாதா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை அடுத்து எட்டேலு மஞ்சுநாதா என்ற திரைப்படம் 2009 ஆம் ஆண்டு கர்நாடகா அரசின் மாநில திரைப்பட விருதைப் பெற்றது.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளி வந்த ரங்கநாயக்கா திரைப்படம் வசூலில் சுனக்கம் காட்டியுள்ளது. அது மட்டுமா சமீபத்தில் எங்களிடம் வாங்கிய புத்தகங்களுக்கு இன்னும் பணம் செலுத்தாமல் இருக்கிறார் என்று புத்தகக் கடை உரிமையாளர் ஒருவர் இயக்குனர் மீது புகார் தந்திருக்கிறார்.
மோசமான முடிவை எடுத்து இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில் இவர் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட உடல் பிளாஸ்டிக் கவர் சுற்றி ஆம்புலன்ஸில் ஏற்றும் வரை பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அந்த வீடியோவை பார்த்தும் ரசிகர்கள் அனைவரும் பரபரப்பானதோடு ஆழ்ந்த சோகத்திலும் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
Summary in English : It’s a sad day for the Kannada film industry as we’ve just learned about the untimely passing of director Guruprasad. His work touched so many hearts, and it feels surreal to think that he’s no longer with us. Known for his unique storytelling and ability to weave humor into serious themes, Guruprasad was a true gem in the world of cinema.