தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ஊர்வசி அண்மையில் பேட்டி ஒன்றில் பேசும் போது “மகளிர் மட்டும்” படத்தில் இடம் பிடித்த பாடல் பற்றி தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
நடிகை ஊர்வசி பற்றி அதிக அளவு அறிமுகம் தேவையில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் மகளிர் மட்டும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து அந்த படத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சில சீக்ரெட்டுகளை உடைத்திருக்கிறார்.
அந்த வகையில் நடிகர் நாசர் நடித்திருந்த அந்த படத்தில் 3 ஹீரோயின்களில் ஒரு ஹீரோவாக ஊர்வசி நடித்திருந்தார். மேலும் நடிகை ரேவதி மற்றும் நடிகை ரோகிணி முறையை மற்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்கள்.
இந்த படத்தில் இடம் பிடித்திருந்த ஒரு பாடல் பற்றி தனது முழு அனுபவத்தையும் அவர் ஓப்பனாக சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இந்த படத்தில் கறவை மாடு மூன்று காளை மாடு ஒன்னு என்ற பாடல் இடம் பிடித்திருக்கும்.
ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இந்த பாடல் வரிகள் இன்றும் முணுமுணுக்கக் கூடிய பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பாடலை கவிஞர் வாலி எழுத எஸ் பி பி எஸ் ஜானகி ஆகியோர் பாடியிருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் இந்த பாடலை கேட்டதும் ஊர்வசி மட்டுமல்லாமல் நடிகை ரேவதி மற்றும் நடிகை ரோகினிக்கு தூக்கி வாரி போட்டது. இந்த பாடலைக் கேட்ட நடிகை ஊர்வசி இந்த பாடலில் நேரடியாக கறவை மாடு மூணு என்று நம்மைத்தான் கறவை மாடு என்று கூறி இருக்கிறார்கள் என்று கூறினாராம்.
மேலும் நேரடியாக மார்பகத்தையும் உருவகப்படுத்துவது போல பாடல் வரிகள் உள்ளதோடு உதடுகளை அசைத்து நடனம் ஆட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அது என்னமோ சரியான பாடல் இல்லையே என நடிகை ரேவதியுடன் பேசி இருக்கிறார்.
இதை சரி என்று ஆமோதித்திருக்கும் ரேவதியும் இதைத் தொடர்ந்து இயக்குனரிடம் இது குறித்து நெருடலான கேள்வியை எழுப்பியதை அடுத்து இந்த பாடலுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார்கள்.
அத்தோடு அந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப தங்கள் உதட்டை அசைத்துக் கொண்டு நடனம் ஆட வேண்டும் என்பது சங்கடமாக உள்ளதாகவும் அவர்கள் கூறியதை அடுத்து இந்த பாடல்வரிகளை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் ஒரு குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைக்கக்கூடிய பெண்களுடைய உருவகம் தான் கறவை மாடு என்பது என்பதை கூறியிருக்கிறார்.
இந்த இடத்தில் கவிஞர் வாலி இருந்தபோது கூட டேக் இட் ஈசி ஊர்வசி ரொம்ப குழம்பிருக்காதிங்க என்று கூறியதை நினைவுபடுத்த இவர் பின்னாளில் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி என்ற பாடல் காதலன் படத்தில் இடம் பிடித்தது குறித்தும் பேசி இருக்கிறார்.
மேலும் இந்த பேட்டியில் தன்னுடைய மார்பகத்தை பார்த்து தான் இந்த வார்த்தையை கூறினார்கள் என்று குழம்பிய நடிகை ஊர்வசி பிறகு தன்னுடைய சந்தேகத்தை தீர்த்து விட்ட அந்த பாடலில் நடித்து முடித்தது தற்போது வெளி வந்துள்ளது.
Summary in English: The “karavai-maadu-moongu-kaalai-maadu-onnu” song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate. Some folks are loving the playful lyrics and infectious rhythm, while others are raising eyebrows over its themes and interpretations.