நடிகை குஷ்பு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சினிமா துறைக்குள் நுழைந்து 45 ஆண்டுகள் கடந்து விட்டதை வீடியோ ஒன்றின் மூலம் உற்சாகத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு மீனா என்ன அட்வைஸ் கொடுத்தார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை குஷ்பூ தனது 7 வயதிலிருந்து சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து தமிழ் படமான வருஷம் 16 படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்யப்பட்டார்.
இவரின் முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்ததோடு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை இவருக்கு பெற்று தந்ததை அடுத்து பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
45 ஆண்டுகள் ஓடிவிட்டது..
அந்த வகையில் இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் 80, 90 கால கட்டங்களில் பல திரைப்படங்களில் நடித்து தன்னுடைய பன்முகத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து பிரபுவோடு இணைந்து நடித்த சின்னத்தம்பி திரைப்படம் சூப்பர் சூப்பர் ஹிட் கதை அடுத்து பிரபுவோடு இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.
இதைத் தொடர்ந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் இவர் இயக்குனர் சுந்தர் சி யை காதலித்த திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
தற்போதும் சினிமாவில் படு பிஸியாக நடித்து வரும் குஷ்பூ தான் நடிக்க துவங்கிய 45 ஆண்டுகள் ஆகிவிட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்தப் பதிவில் ஏழு வயதில் இருந்து தற்போது வரை அவர் நடித்த விவரங்களை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.
மேலும் அவர் தன்னோடு இணைந்து பயணித்த சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தன்னை வளர்க்க தன் நலத்தை விரும்பியவர்கள் என பலர் பற்றிய தரவுகளை இணைத்து இருப்பது ரசிக்கும்படி உள்ளது.
குஷ்பூ போட்ட வீடியோவிற்கு மீனா தந்த அட்வைஸ்..
அத்தோடு தனது இந்த அசுர வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
அத்தோடு இவரது இந்த பதிவை பார்த்து நடிகை மீனா தன் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து இருக்கும் குஷ்புவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
அதில் அவர் 45 ஆண்டு சினிமாவில் பயணித்து வருவது குறித்து இந்த பதிவு ரசிகர்களை அதிகமாக ஈர்த்துள்ளது. குஷ்புவுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் நடிகை மீனா அவரது இந்த பயணத்தை புத்தகமாக மாற்ற அட்வைஸ் செய்திருக்கிறார்.
இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது.
Summary in English: Can you believe it? Actress Kushboo has just hit a major milestone. 45 years in the cinema! That’s right, this iconic star has been gracing our screens since the ’80s, and what a journey it’s been! From her early roles that captured hearts to her evolution into a powerhouse performer, Kushboo has truly done it all.