நடிகை குஷ்பூ தன்னுடைய வீட்டில் மண மணக்கும் பிரியாணியை சமைக்கும் வீடியோவை வெளியிட்டு அனைவரது நாவிலும் எச்சில் ஊற வைத்த சம்பவம்.
தமிழ் திரையுலகில் நடிகை குஷ்பூக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது என்று சொல்லலாம். வருஷம் 16 படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்தவர்.
இதை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்ததை அடுத்து தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்கும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் கோயில் கட்டி ரசித்தார்கள். மேலும் இவர் தனது அற்புத நடிப்புக்காக பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்.
சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில் சின்னத்தம்பி படத்தில் பிரபுவோடு இணைந்து நடித்ததை அடுத்து அவரோடு இணைந்து கிசு கிசுக்கள் வெளிவந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.
இதை அடுத்து அந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக மாறி பன்முகத்திறமையை சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார்.
இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய குஷ்பூ தற்போது மட்டன் பிரியாணி செய்திருக்கக் கூடிய வீடியோவை வெளியிட்டு அனைவரையும் அதிரவிட்டிருக்கிறார்.
அட இது நம்ம குஷ்பூ வா என்று கேட்கக் கூடிய வகையில் பக்குவமாக பிரியாணியை சமைத்து ரசிகர்களுக்கு விருந்தாக்கி விட்டிருக்கும் இவரது இந்த வீடியோ இணையம் எங்கும் தற்போது வேகமாக பரவி வருகிறது.
அது மட்டுமா பிரியாணி தயார் ஆனதும் ஒரு பாத்திரத்தில் சூடான கறி துண்டுகளை போட்டு அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி அந்த பாத்திரத்தை அப்படியே பிரியாணி பாத்திரத்தில் வைத்து மூடி விட வேண்டும் என்று பக்குவமாக பிரியாணி செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறார்.
அத்தோடு சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் பிரியாணியின் ஒட்டு மொத்தமும் அனைவரது நாவிலும் எச்சில் ஊற வைக்க கூடிய வகையில் வேறு லெவல் இருக்கும் என்று குஷ்பு கூறி இருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் நாக்கில் எச்சில் ஊறுகிறது என்று சொல்லிவிட்டபடி பிரியாணி சுவைக்க தவித்து வருகிறார்கள்.
நீங்களும் குஷ்பூ சொன்ன பக்குவத்தில் பிரியாணியை செய்து சுவைத்து எப்படி உள்ளது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.
Summary in English: Actress Kushboo recently dropped an engaging video that’s got food enthusiasts buzzing! In this delightful clip, she showcases her unique method for whipping up a mouthwatering dum biryani that’s sure to make your taste buds dance. From the aromatic spices to the perfectly cooked rice layered with tender meat, Kushboo’s approach is all about bringing flavors together in a way that feels both traditional and fresh.