நடிகை குஷ்பூ சமீபத்திய பேட்டி ஒன்று அண்ணாத்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படம் குறித்து பேசும் போதும் கதை சொல்லும் போதும் நடிகை மீனாவும் நானும் தான் இந்த படத்தின் ஹீரோயின் என்று கூறினார்கள்.
மேலும் படம் முழுக்க பயணிக்க கூடிய கேரக்டர் ரோலாக எங்களுடைய ரோல் இருக்கும் என்று சொன்னார்கள். படம் வெளிவந்த பிறகு தான் நாங்கள் இருவரும் கேமியோ ரோலின் நடித்தது போல ஏமாற்றத்தில் மூழ்கினோம்.
நயன்தாரா வந்து தான் எல்லாமே நாசமாச்சு..
அண்ணாத்த படத்தின் கதையில் ரஜினி சாரின் தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் சென்ற பிறகு ரஜினி சார் அவரை தேடி செல்வார்.
அதே நேரம் நானும், மீனாவும் வேறொரு பக்கம் அவரைத் தேடிச் சொல்வோம். அந்த தேடல்களின் சந்திப்பு யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்திருந்தது. அதுதான் கதை என்று நாங்கள் முதலில் நம்பினோம்.
ஆனால் திடீரென படத்தின் நடிகை நயன்தாராவை உள்ள எதற்கு கொண்டு வந்தார்கள். அவர் வந்த பிறகு படத்தின் கதையில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டு வந்ததால் மொத்த படமும் சொதப்பிவிட்டது.
ஆனால் கதை சொல்லும் போது இன்னொரு ஹீரோயின் இருப்பார் அவரை ரஜினி சார் சைலன்ட் ஆக காதலிப்பார். மேலும் ரஜினி சார் அவரைப் பின் தொடர்ந்து கொண்டிருப்பார் அவ்வளவுதான் என்று சொன்னார்கள்.
அது மட்டுமல்லாமல் ரஜினி சாருக்கும் அவருக்கும் டூயட் பாடல்கள் எல்லாம் கிடையாது என்றார்கள். ஆனால் திடீரென நயன்தாரா உள்ளே வந்த பிறகு டூயட் பாடல்கள் வந்தது. இருவருக்கும் உண்டான காதல் காட்சிகள் வந்தது.
இதை அடுத்து நடிகை மீனாவையும் என்னையும் கேமியோ கதாபாத்திரம் போல் சுருக்கி விட்டு படத்தைக் கொண்டு வந்தார்கள். அந்த நேரத்தில் கொரோனா லாக் டவுன் வேறு. ரஜினி சாருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது.
நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. குஷ்பூ கதறல்..
இதனைத் தொடர்ந்து தான் படத்தின் கதையில் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டு திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த படம் தோல்வி படமாக மாறியது.
ஆனால் ஆரம்பத்தில் சொன்ன கதையை அப்படியே படமாக எடுத்திருந்தால் இது ஒரு நல்ல வெற்றி படமாக மாறி இருக்கும். என்னுடைய கதாபாத்திரத்தை சுருக்கி விட்டார்களே என்பதற்காக நான் சொல்லவில்லை.
நயன்தாராவின் வருகைக்கு பிறகு தான் திரைப்படத்தின் திரைக்கதை தாறுமாறாக மாறி எங்கே செல்கிறது, எதற்கு தெரிகிறது என்று தெரியாமல் படத்தை முடித்தால் போதும் என்ற முடிவில் முடித்து விட்டார்கள்.
இது இயக்குனர் மூலம் நடந்ததா? அல்லது தயாரிப்பாளர் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக ரஜினி சாருக்கு இதில் சம்பந்தம் இருக்காது என்பது நிச்சயமாக எனக்குத் தெரியும்.
ஏனென்றால் அவர் கதையை ஒப்புக்கொண்ட போது என்ன சொன்னாரோ அதை கடைசி வரை கொண்டு செல்வார். மேலும் இடையில் திரைக்கதை மாற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ஏன் நடிக்கும் என்ற ஏமாற்றத்துடன் நானும் மீனாவும் இன்று வரை இருந்திருக்கிறோம் என்று நடிகை குஷ்பூ பேசியது வைரலாகி உள்ளது.
Summary in English: In a recent interview, actress Kushbu didn’t hold back when talking about her experience on the set of “Annaatha.” She shared some juicy insights that fans are definitely going to want to hear. One of the standout moments was when she mentioned Nayanthara’s entry into the film. According to Kushbu, it really threw a wrench in the plot and changed the overall vibe of the story.