தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கும் நயன்தாரா 2024 நடித்து வெளிவந்த படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை. அதை அடுத்து இந்த 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து முன்னணி தமிழ் நடிகர்களோடு இணைந்து தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆக மின்னும் நயன்தாரா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவர் நடிக்கின்ற காலத்தில் பல்வேறு கிசுகிசுகளில் சிக்கிய இவர் அண்மை காலத்தில் தனது டாக்குமென்டரி படத்தால் முன்னணி நடிகர் தனுஷ் உடன் ஏற்பட்ட சர்ச்சை பேசும் பொருளாக மாறியது.
இந்நிலையில் இவர் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளி வந்த படங்கள் சரியாக ஓடாதவை அடுத்து லேடிஸ் சூப்பர் ஸ்டாரை காண முடியாமல் ஏங்கும் ரசிகர்களுக்கு விருந்து வைக்கக் கூடிய வகையில் இந்த ஆண்டு சம்பவத்தை செய்துவிட்டார் நயன்தாரா.
இதற்குக் காரணம் இந்த ஆண்டு மட்டும் வரிசை கட்டி மாதத்திற்கு ஒரு படம் என வெளியிட்டாலும் எட்டு படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ள நிலையில் உற்சாகத்தோடு நயனின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அது மட்டுமா? நடிகை திரிஷா அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்ரி என இரண்டு படங்களோடு போட்டி போட காத்திருக்கும் நயன்தாரா 2025 இல் இவர்கள் இருவருக்கும் போட்டி சபாஷ் சரியான போட்டி என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
அப்படி அடுத்தடுத்து என்னென்ன படங்கள் வெளிவருகிறது என்றால்
1.டெஸ்ட்
2.மண்ணாங்கட்டி
3.டியர் ஸ்டூடண்ட்
4.டாக்ஸிக்
5.கிஸ்
6.ராக்காயி
7.மூக்குத்தி அம்மன்
8.மகேஷ் நாராயணன் இயக்கம் மலையாள படம்.
இதில் நடிகர் யாஷுடன் இணைந்து டாக்ஸிக் படத்தில் அவருக்கு அக்காவாக நயன்தாரா நடித்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் பார் ஒன்று யார் ஹூமோ குரேஷியுடன் நயன்தாரா வரும் காட்சி ஒன்று லீக் ஆகி உள்ளது.
இதை அடுத்து பாலிவுட்டிலும் களம் இறங்கி இருக்கும் நயன்தாரா அடுத்தடுத்து தமிழ், மலையாளம், கன்னட படங்களில் கலக்க இருக்கிறார்.எனவே 2025 ஆண்டு நிறைய நயன்தாராவிக்கு சிறப்பாக இருக்கும் என சொல்லலாம்.
Summary in English: Nayanthara, the lady superstar of Indian cinema, is set to light up our screens with not one, not two, but a whopping eight movies in her lineup for 2025! Can you believe it? This powerhouse actress has been on a roll, and it looks like next year is going to be no different. From intense dramas to action-packed thrillers, she’s got a little something for everyone.