வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் லால் சலாம் கொடுத்த லாபத்தை வாரிசு தரவில்லை என்ற குண்டை தூக்கி போடும் விஷயத்தை தற்போது சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அது குறித்து பார்க்கலாம்.
தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படம் தோல்வி படமாக அமைந்திருந்தது.
இந்நிலையில் அரசியலில் தீவிரம் காட்ட இருப்பதை அடுத்து தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருக்கக்கூடிய இவர் வாரிசு படம் தோல்வியாக அமைந்து விட்டதை அதன் தயாரிப்பாளர் மறைமுகமாக பேசியிருக்கிறார்.
இவர் தயாரித்த கடைசி சில படங்கள் கடுமையான தோல்வியை சந்தித்தது இதனால் நட்டம் தான் ஏற்பட்டது கேம் சேஞ்சர் திரைப்படம் எனக்கு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கும் ஒரு கம்பேக் திரைப்படம் என பேசி இருக்கிறார்.
இவர் இப்படி பேசியது தான் குத்தம் உடனே இதனுடைய உள் அர்த்தம் பற்றி இணைய பக்கங்களில் ஆளுக்கு ஒருவர் வகை வகையாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.
குறிப்பாக விஜயின் வாரிசு திரைப்படத்தை சுட்டிக்காட்டிய தில்ராஜ் இப்படி பேசி இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியதை அடுத்து விஜயின் ரசிகர்கள் சில குறிப்பிட்ட கட்சிகளின் தொண்டர்கள் என அந்த வீடியோவை வைரலாக மாற்றி விட்டார்கள்.
கடந்த வருடம் உண்மையாகவே அடி வாங்கியது யார் என்று கேட்டால் லைக்கா தயாரிப்பு நிறுவனம்தான் ரசிகர்களே லைக்கா நிறுவனம் மீது பரிதாபம் கொள்ளும் அளவிற்கு திரும்பத் திரும்ப அடி வாங்கியது லைக்கா நிறுவனம்.
அந்த நிறுவனமே பொதுவெளியில் நாங்கள் நஷ்டம் அடைந்தோம் என்று பதிவு செய்யவில்லை. ஆனால் தில்ராஜ் எதற்காக இப்படி பொதுவெளியில் புலம்புகிறார்.
அப்படி என்றால் லால் சலாம் படத்தின் மூலம் லைக்கா நிறுவனம் பெற்ற லாபத்தை கூட வாரிசு படம் மூலம் தில்ராஜ் பெறவில்லையா? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு எதற்காக இவர் இப்படி புலம்ப வேண்டும் என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளது.
Summary in English: Producer Dil Raju recently stirred up quite the conversation on the internet when he hinted at facing losses from Vijay’s much-anticipated film, “Varisu.” You can imagine the buzz this created among fans and industry insiders alike! Social media lit up with reactions, memes, and theories about what this could mean for both the film and Dil Raju’s future projects.