தமிழ் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக கருதப்படும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
தற்போது நடந்துள்ள சம்பவத்தை பார்க்கும் போது வேலாயுதம் படத்தில் நடிகர் சந்தானம் பேசிய வசனம் தான் அனைவருக்கும் ஞாபகத்தில் வரும்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் இன்னும் நான்கு நாட்களில் வெளிவர உள்ளது.
இந்தியன் 2 படத்துக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் ராம்சரனை வைத்து இயக்கிய திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்தப் படத்தை இயக்குனர் தில்ராஜ் தயாரிக்க படத்திற்கான இசையை அனிருத் அமைத்திருக்கிறார்.
இந்தப் படம் வரும் பொங்கலுக்கு திரை அரங்குகளில் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளி வந்துள்ளது.
இந்த படத்துக்காக புக்கிங் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது இந்த படத்தை தமிழில் வெளிப்பட முடியாத அளவு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு லைக்கா தான் காரணம் என்று கூறுகிறார்கள்.
இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்காமல் கேம் சேஞ்சர் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று லைக்கா நிறுவனம் போர் கொடி தூக்கி இருப்பதோடு திரைத்துறை கூட்டமைப்பில் புகார் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.
இந்தியன் 3 படத்தை முடிக்க ஷங்கர் மேலும் 65 கோடி ரூபாய் பட்ஜெட் கேட்பதாக குற்றச்சாட்டை சுமந்து இருக்கும் லைக்கா இந்தியன் 2 படத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க மீண்டும் 65 கோடி கேட்டால் எங்களால் கொடுக்க முடியாது என்று முறையிட்டுள்ளது.
இந்தியன் திரைப்படத்தில் படமாக்கப்பட வேண்டிய மீதியுள்ள பாடல் மற்றும் காட்சிகளை எடுக்காமல் படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என ஷங்கர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நான்கு நாட்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்து வரும் விதமாக இந்த பேச்சு வார்த்தையில் எந்தவித சமூகம் முடியும் எட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இதை அடுத்து வரும் ஜனவரி 10-ஆம் தேதி தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகுமா? வெளியாகதா? என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எதிரொலிக்கிறது.
Summary in English: In the latest buzz around the release of “Game Changer,” it looks like Lyca has really stirred the pot for Shankar! Fans are all abuzz, and you can practically feel the excitement in the air. But wait, what’s this trouble they’re talking about? Speculations are flying about some behind-the-scenes drama that could change everything for Shankar and his team.