12 ஆண்டுகள் கழித்து வெளிவரும் மத கஜ ராஜா திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விஷாலின் கைகள் நடுங்கியதை அடுத்து என்ன ஆனது என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
2012 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் நடிகர் விஷாலின் மத கஜ ராஜா என்ற திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளிவர இருந்து இது வரை இன்னும் வெளி வரவில்லை.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படம் திரைக்கு வெளிவர உள்ள நிலையில் பொங்கல் ரேஸில் இருந்து அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் விலகிவிட தொடர்ச்சியாக 10, 12 படங்கள் தங்களுடைய ரிலீஸ் தேதியை அறிவித்த வண்ணம் உள்ளது.
விஷாலுக்கு ஏன் கை நடுங்குது? என்ன ஆச்சு..
சினிமாவை விரும்பி பார்ப்பவர்களுக்கு இந்த பொங்கல் விடுமுறை ஒரு மிகப்பெரிய விருந்தாக அமைதி இருக்க கூடிய நிலையில் விஷாலின் மத கஜ ராஜா திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வந்ததும் அவரது ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள்.
இதை அடுத்து இந்த படத்தின் பிரமோஷன் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு விஷயங்கள் வெளிவந்து உள்ளது. 12 ஆண்டுகள் கழித்து வெளிவர இருக்கக்கூடிய இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா? என்று பயந்திருக்கிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்ததை அடுத்து இந்த படத்தை குறித்து சுந்தர் சி பேசி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க படத்தின் வெளியிட்டு விழாவில் விஷால் பேசிய போது அவர் உடல் நிலை மோசமாக இருந்தது போல் தெரிகிறது.
இதற்கு காரணம் அவர் மைக்கை கையில் பிடிக்கக்கூட முடியாமல் கை நடுங்கிய வண்ணம் இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் கொடுமையாக உள்ளது. சும்மா கல்லு மாதிரி இருந்த மனுஷன் டா இந்த கோலத்திலா பார்க்க வேண்டும். என்ன கொடுமடா என்று புலம்பித் தள்ளி இருக்கிறார்கள்.
அடக்கொடுமைய.. தெரியுமா?
மேலும் விஷால் பூரண நலம் பெற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அதிக அளவு கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் விஷாலுக்கு என்ன ஆனது. அவருடைய கை ஏன் இப்படி நடுங்குகிறது என்று பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது.
இதற்கு பதில் அளித்து இருக்கும் விஷாலுக்கு ரத்தினம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் சண்டை போட்டிருக்கிறார். திடீரென கோபமான அவர் திடீரென சாந்தமாக மாறுகிறார். மேலும் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறார் என்ற தகவல்கள் வந்தது.
அந்த வகையில் உடல்நிலை மோசமாகி தன்னுடைய பழைய நடை, உடை, பாவனை ஏதும் இல்லாமல் ஒரு வயதானவர் போல காணப்படுவதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது கைகள் நடுங்குவதை பார்த்து ரசிகர்கள் மனக்கஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அதை தொடர்ந்து விசாரித்த போது நடிகர் விஷாலுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தொற்று ஏற்பட்டதன் காரணத்தால் தான் இப்படி உடல்நிலை மாறிவிட்டது என்றும் அதற்கு உரிய சிகிச்சைகளை விஷால் மேற்கொண்டு வருவதால் விரைவில் குணமாகிவிடுவார் என்று சில விஷயங்கள் வெளிவந்துள்ளது.
Summary in English: At the recent Madha Gaja Raja audio launch event, fans couldn’t help but notice something a little unusual about Vishal—his hand was shivering. It definitely raised some eyebrows and had everyone buzzing with concern. But here’s the scoop: it wasn’t just a random case of nerves or jitters. Vishal was actually dealing with a minor nerve infection.